தினக்கூலி

தினக்கூலி
**************

எப்பவும் காலையில்...
ஏழு முதல் எட்டு வரை...

அங்கு ஓரே கூட்டம்...!

திடீர்னு ஒருவர் வருவார்...!
திடுதிப்புன்னு எல்லோரையும்...

நீ அங்க போ...!
நீ இங்க போன்னு...!!

பிரிச்சி விடுவார்....!!!

பார்த்தாலே தெரியும்
இவர்கள் தினக்கூலியென்று...

அதில் ஒரு தம்பதி...
கூடவே ஆறுவயது...
பையன்...

சரியாக ஒன்பது மணிக்கு...
வேலை ஆரம்பம்...

ஒவ்வோரு இடத்துலையும்...
அவர்களை வேலைவாங்க...
ஒரு மேஸ்திரி உண்டு...

அவன் எப்பொழுதும்...

"ஏய்...
இந்த ஜல்லிய...
அள்ளி அங்க போடு...

அங்க என்ன கூட்டமா...
நின்னு பேசிட்டு இருக்கீங்கன்னு..."

சத்தம்போட்டு...
பேசிட்டே இருப்பான்...!!

வேலை நேரத்தில்...
அந்தப் பையன்...
ஒரு இடத்துலையும் இருக்கமாட்டான்...

அம்மா எங்க போனாலும்...
கூடவே போவான்...

அம்மா...
ஒருசட்டி ஜல்லிய அள்ளிப்போட்டா...

பையன் அவன் சத்துக்கு...
ஏதோ...
ரெண்டு ஜல்லிக்கல்லையாவது...
அள்ளிக்கொண்டு போய்...
போடுவான்....

ஒழுங்கா வேலைபாருன்னு...
மேஸ்திரி அம்மாவ திட்டுனா...

முந்தானையில ஒழிஞ்சி...
பயத்துடன் எட்டிப்பாப்பான்....!!

மாலை ஆறு மணிக்கு
வேலை முடிஞ்சா...

ஆறு முப்பதுக்கு...
வீட்டுக்கு போய்விடுவாங்க....

அன்று...
பக்கத்து வீட்டு முற்றத்தில்...

சின்ன சலசலப்பு...

"ஏய் நான் தான் டீச்சர்...
நீங்க எல்லோரும் ஸ்டூடண்ட்...

எல்லோரும் ஹோம் ஒர்க்...
பண்ணியாச்சான்னு பாப்பேன்...
ம்ம்ம்ம்....

டேய்... நீ பண்ணலேன்னு சொல்லனும்...
சரியா..."

இப்படி முன்கூட்டியே பேசிவச்சி...
விளையாடுறாங்க பசங்க....

ஹோம் ஒர்க் செக் பண்ணும் போது...
பண்ணலன்னு சொன்னவன...

போய் கிளாஸ்க்கு வெளிய...
நில்லுன்னு சொல்ல...

இல்ல...
இன்னைக்கு நான் டீச்சரா இருக்கேன்...

முதல்ல இருந்து விளையாடுவோம்...
நீ வெளிய போய் நில்லுன்னு சொல்ல...

சின்ன சலசலப்பு...
கொஞ்சம் பெருசாகுது...

திடீர்னு ஒரு சத்தம்....
அடுத்த வீட்டு வாசலிலிருந்து...!

டேய்...
ஒழுங்கா விளையாடுங்கடான்னு...

நீ யாருன்னு கேட்டா...
அதுக்கு அவன் சொல்லுறான்....

"நான் தாண்டா மேஸ்திரி..."

மேஸ்திரின்னா...?

மேஸ்திரின்னா...
இப்படித்தான் எல்லோரையும்,
திட்டுவான்...

பள்ளிகூடத்துல மேஸ்திரிக்கு...
என்னடா வேலை...?

பதில் சொல்ல...
வாய் வரவில்லை அவனுக்கு...

பாவம்...
அவன் என்ன சொல்லுவான்...!!!

பள்ளி செல்லும் பசங்க
விளையாடும் விளையாட்டில்...

இவனது பேச்சு...
எப்படி எடுபடும்...!!!


இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (11-Mar-16, 7:49 pm)
சேர்த்தது : க முரளி
Tanglish : thinakkooli
பார்வை : 188

மேலே