தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்- 32
வானம்பாடி கானம்பாடி கானகத்தில் சுற்றுது – அதை
காணவேண்டி காதல்ஜோடி கால்கடுக்க நிற்குது
வானம்பாடி ஜோடியோடு விரைவாக வந்தது – அதை
காதல்ஜோடி கனிவோடு அருகில்வா என்றது..!
அந்திசாயும் நேரம் ஆணும் பெண்ணும் கூடும்
தந்திரங்கள் ஏதுமின்றி மன்மதங்கள் ஆடும்
இன்பமென்னும் பானம் இருவருள்ளும் பாயும்
இடைவேளைக்கு விடைகொடுத்து விரகத்தில் மேயும்
அந்திவானம் வெளுத்தப்போதும் குந்திபேச தோணும்
கொஞ்சநேரம் என்றுச்சொல்லி கொள்ளநேரம் கொஞ்சும்
முந்தி எழுந்து கொண்டாலும் முந்தாணை இழுக்கும்
அந்தநேர இன்பசுகத்தில் தந்தானா படிக்கும்
சித்தத்தில் தெளிவு சிந்த விட்டப்பிறகு - நீ
மொத்தத்தில் முத்தத்தை தந்துவிட்ட நிலவு
பித்தத்தின் அளவு உச்சந்தொட்டப் பிறகு – நீ
கச்சத்தின் மிச்சத்தை கழட்டிவிட்ட புலவு..!
இரவுக்கும் பகலுக்கும் நிறபேதம் உண்டு
உறவுக்கும் நட்புக்கும் நிறைய பேதம் உண்டு
கனவுக்கும் நனவுக்கும் வெகு பேதம் உண்டு
இவையாவுமே இல்லாதது காதலென்னும் செண்டு
குயிலும் காக்கையும் ஒரே நிறமாகும்
தமிழும் அமுழ்தும் ஒரே தரமாகும்
வானமும் பூமியும் ஒரே அளவாகும்
சூரியனும் சந்திரனும் ஒரே குலமாகும்
கவிஞனின் கற்பனைக்கு கால நேரமில்லை
காதலின் நற்பணிக்கு ஜாதி பேதமில்லை
அர்த்தஜாம நேரத்திலும் காமத்தின் தொல்லை
ஜமுக்காளத்துக்குள்ளே ஜோடியோடு கொள்ளை..!