உனது விழியே எனது பார்வை
இந்த -
அமல நதிக்குள்
அமிழ்தாய் இறங்கிய
அருவியே...!
என் -
மனப் பசிக்கு
நிலாச்சோறூட்டும்
உன் -
முகத்தை முகர்ந்து
முரிந்து போவதேன்?
தேன்...!
இந்த -
திராவகத்தில்...
தேன் -
திராவகமாகாது...
திராவகம் -
தேனாவதுகண்டு
திகைத்துக் கிடக்கிறேன்.
என் -
பிரிய நட்பே...!
நாம் -
அன்பை செலுத்துவது ஆனந்தமானது.
ஆனால்...
நமக்குள் -
ஒருவருள்..
ஒருவராய்...
ஜீவிப்பதென்பது
துன்பமே.
அந்த
துன்ப நாய்களின்
சதையை...
குதறிக் களிக்கும்
கூகைகளின்
சோகமும்.... சுகமோ...!