அவள் தந்த சேதி
வான்மதியில் ஒரு பாதி
வாசலிலே அதன் மீதி
பார்த்திருந்தாள் இளம் பரிதி
பறவைகளின் பிரதிநிதி
என்வரவால் விழித்தபடி
எடுத்துவைக்க வேக அடி
கதவருகே இருக்க படி
கால்தவற பிடித்த பிடி
கையெனது உணர்ந்த ரதி
கணப்பொழுதில் விலக மதி
நாணுகிறாள் எனும் சேதி
நான்பதித்தேன் கவி யெழுதி
... மணிமீ
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
