இடைவெளிகள் நீண்டு கிடக்கின்றன

இடைவெளிகள் நீண்டு கிடக்கின்றன

இடைவெளிகள்
நீண்டு கிடக்கின்றன ...

தொடர் வண்டியின்
தூரத்து சப்தம் உயிரெங்கும்
ஓடுவதாய்,
ஒற்றையடிக்குள் பின் நினைவு...

பழுத்த இலைகளின்
மிதப்புக்களில் மீண்டும்
கண்ணீரே முதலில்
வருகிறது....

கர்வமற்ற கனவுகளை
தூசு தட்டி தந்து விடவே
நினைக்கிறது
கரையற்ற அன்பு...

சொல்லாத வார்த்தைகள்
ஊறிய ஆமையின்
ஆசையாய் வந்து
கொண்டேயிருக்கிறது....

நிறைய நிறைய எழுதிக்
கொண்ட
மனதிலிருந்து
ஒன்றுகூட வெளிவரவில்லை...

கட்டிக் கொண்டு
அழுது விட்டால் அதுவே
போதுமானது
இடைவெளிகள் நீண்டே
கிடந்தாலும்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (12-Mar-16, 10:13 am)
பார்வை : 628

மேலே