கனவாய் கலைந்த காதல் 14

ஒரு
பூமரத்தில் ஆயிரம் பூக்கள் .....
பூக்கலாம் ஆனால் மரம் ....
ஒன்றுதான் அதற்கு எந்த பூ ...
அழகு அழகில்லை என்றெல்லாம் ....
வேறுபடுத்த தெரியாது ....
பூவழகன் இப்போ இதே ....
நிலையில் தான் இருக்கிறான் ....!!!

" பூவழகி" " பூமகள்" இரட்டை பூக்கள் ....
இரண்டையுமே தூக்கி எறிய முற்பட்டான் ...
ஆனால் முதல் பூத்த பூவுக்கு ....
மரத்துக்கு ஒரு இச்சை இருக்கத்தான் ....
செய்யும் அந்த மரத்தை முதல் முதல் ...
அழகு படுத்துவது முதல் பூக்கும் பூதான் ....!!!

முடிவெடுத்தான்
பூமகளை அழைத்தான் .....
பூமகள் நானும் சுற்றி வளைத்து பேசல்ல ....
உன்னில் எந்த குறைபாடும் இல்லை ....
உன்னை விரும்பும் பாக்கியத்தை ....
நான் பெறவில்லை அதிஸ்ரசாலியில்லை ....
என் மனதில் இன்னொருத்தியின் இதயம் ...
பதிந்து விட்டது அதை அழிக்க முடியாது ...
தயக்கத்தோடு சொன்னான் பூவழகன் ....!!!

அதிர்ச்சியடைந்த பூமகள் ....
கையால் முகத்தை மறைத்தபடி அழுதாள் ....
அவளுக்கு ஆறுதல் சொல்லும் பக்குவம் ....
பூவசகனுக்கு இல்லை அவளை கட்டி பிடித்து ...
முதுகில் தட்டி ஆறுதல் சொல்லும் பக்குவ ...
வயது பூவனுக்கு இல்லை அவளோடு ....
இவனும் மௌனவித்தான் .....!!!

சரி விடு பூவா
நான் கொடுத்து வைக்கல்ல .....
அதுசரி உன் அந்த அதிஸ்ரசாலி யார் ...?
பூவழகன் சொன்னான் அய்யோ அதை ....
இப்போ சொல்லமாடேன் காரணம் ....
அவள் என்னை விரும்புகிறாளா .....?
தெரியல்ல என்று தயங்கினான் ....
எனக்கு சொல்லடா நான் உதவுகிறேன் ...
சிரித்த முகத்தோடு கனத்த இதயத்தோடு ...
சென்றால் பூமகள் .....!!!

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்த காதல் 14
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Mar-16, 9:11 am)
பார்வை : 113

மேலே