கசிவு
வெளிச்சப் புள்ளியை
மேகம் மறைத்தது போல
ஞாபகத்தை
மறதி மறைத்துவிடுகிறது.
ஞாபகக் கூட்டில்
எதை எங்கே? வைத்தோம்
என்பது மறந்துவிடுகிறது.
சேகரங்ளை, அவ்வப்போது
செலவாணி செய்யாமல்
ஞாபகக் கூடு
நிறைந்து வழிகிறது.
தொட்டி நிரம்பியதும்
விழும் நீர்
கீழே விழுவதைப்போல்
ஞாபகங்கள்
விழுந்து விடுகின்றன.
தண்ணீர்த் தொட்டியின்
விரிசலிலும்
நீர் கசிநது விடுகிறது.