கோடையிலே உயிரே உன் பிரிவு

அறுக்கப்படும் மாங்கனியில் வழிந்து ஒழுகும் பழச்சாறு,
வாடஸ்அப்பில் நலம்நாடி நீ நடத்தும் உரையாடல்கள்,

கட்டித்தயிரை கடையத் திரளும் வெண்ணைப்பசையாய்
ஒட்டிக்கொண்டது,
முகநூலில் பகிரப்பட்ட உன் புகைப்படங்களில் என்
பார்வை,

உச்சிவேளையில் உணவுக்குழலில் செவ்விளநீர் பயணிக்கும்
குளிர்ச்சியாய்,
சுகம்கொடுக்கும் உன்னை வருணித்து நானெழுதும் கவிதைகள்,

இவையே இளைப்பாற சுவையான சிறுசிறு சந்தோஷங்கள்,
கோடைவெயிலில் உன்பிரிவின் வெப்பத்தில் வாடும் எனக்கு!!!

-g.k

எழுதியவர் : காவ்யா gk (12-Mar-16, 2:52 pm)
சேர்த்தது : காவ்யா
பார்வை : 102

மேலே