உதவும் கடமை

கதிரவன் ஒளி தந்து

உயிர்வாழ உதவுகின்றது,

வருணனும் நீர் தந்து

உயிர்வாழ உதவுகின்றது,

காற்றும் உயிர்வளி தந்து

உயிர்வாழ உதவுகின்றது,

தாவரமும் உணவு தந்து

உயிர்வாழ உதவுகின்றது,

இயற்கையனைத்தும் உதவுவதை

இயல்பாக கொண்டுள்ளபோது,

மனிதா உனக்கு மட்டும் மனமில்லையே

மனிதனை மதிக்கும் நேயமில்லையே,

தேவையில்லையென்று

வருணனும் காற்றும் நினைத்திருந்தால்

உன்கதி என்னவாகும் மானிடா,

சிந்தித்து புரிந்து கொள்ளடா

உதவுவது உனது பன்படா,

இதையேற்பது உனக்கு அழகடா

தேவையறிந்து உதவுவது கடமையடா.

எழுதியவர் : நா.சு.கார்த்தி (13-Mar-16, 11:41 am)
Tanglish : uthavum kadamai
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே