கனிகுரல் வாய்த்தோள்

இன்னும் இசைமீட்டி பாடேன் பெண்ணே
இன்னிசை உந்தன் அசைவே பெண்ணே
இரவின் உயிரும் உன்மெய்யால் தொலையும்
கருத்த முகிலும் பார்க்கவே கலையும்
பாய்ந்தோடும் நதியாவும் கேட்கவேண்டி மெதுவோடும்
காற்றில் பிணைந்த இன்பக் குரலை
பாறைகளும் செவிமடுத்து பாவினாலே உருநெழித்து
தேனொழுகும் பாமுடிவில் பாறையிலும் உயிர்ப்பிறக்கும்.

எழுதியவர் : செல்வா .மு (தமிழ் குமரன் ) (13-Mar-16, 4:23 pm)
பார்வை : 98

மேலே