யார் இந்த தேவதை

என்னவளே!!!

முதல் நாள்
முதல் நொடி
முதல் பாடம்
கற்றேன் உன்னிடம்

காதல் வந்து காமம் சொல்ல
காதலே காமம் கொல்ல
கல்லறை செல்லும் காமம்
நான் காண்டேன்

கவி பிச்சை நான் கேட்க
நீ யார் அதை கேட்க
என்றே நீ உலர
கண்ணீர் தான் சொந்தம் எனக்கும்

கால் கொலுசு நீ அணிய
கை வளையல் செவியடைக்க
ஒரு பார்வை நீ பார்க்க...
மின்வேலியில் சிக்கிய மிருகமாக நான்

ஓர பார்வை ஒளிந்து கொண்டு
நீ பார்க்க ஒதுங்க இடமுண்டோ!!!
தப்பி பிழைக்க என் பார்வைக்கு...
செத்து மடிந்ததே! உன் பார்வையில்

கண்ணகி சாயல் உன்னிடம்
நான் காண... என் காதல் சொல்ல நாளொன்று வர... சாம்பல் ஆகட்டும்
என் தேகம்,விட்டு விடு என் காதலை...

தப்பி பிழைக்க இடம் இருக்க
எங்கு செல்லும் என் பாதம்
உன்னடி சரணம் என்றே!
கல்லறை செல்லும் என் பாதம்

தென்றலுக்கும் சுவாசிக்க காற்று
இன்றி செத்து மடியுமே!
உன் அணைப்பில்
சாக வரம் பெறும் என் இதழ்கள்

என் விரல்கள் அனைத்தும்
உன் விரல்களுக்குள் அடங்கி போக
யார் இருக்கிறார் அன்பு காட்ட
உனை தவிர.... என்னிடம்
வா!!! போகலாம் நரகத்திற்கு
உன்னுடன் வாழ்வதாக இருந்தால்

-சிவா

எழுதியவர் : சிவா (13-Mar-16, 1:20 pm)
பார்வை : 459

மேலே