புதுயுக மங்கை
கணினி கற்று தேர்ந்த
கனடா கனவான்
கணவனாக வேண்டும்..!!
மில்லியை அடித்தாலும்
மில்லியன் குறையாத
சம்பளம் வீடு வர வேண்டும் ..!!
பழைய காதலை ஆராயும்
துப்பறியும்
சாம்பு நான் இல்லை என்று
நீயே புனிதம்
நானோ மாகா புனிதம்
என்று தாம்பத்தியம் புரிய வேண்டும் ..!! ..
எது கேட்டாலும்
இல்லை என்று சொல்லை
சொல்லாத தாராள கொள்கை
வேண்டும்
அதில் விவாகரத்தும் அடங்கும்...!!
...
இப்பாடியாக கனவான்
கணவனானால்
திருமணம் என்னும் சடங்கு
எனக்கு சீக்கிரம் வேண்டும் ..!!!!