முரண்பாட்டுக் கோலங்கள்
அதிகாலை வாசலில்
எறும்புகள் பசிதீர்க்க
மாக்கோலம் போட்டு
அழகுபாத்த மங்கை
சமையல் கட்டில் நுழைந்ததும்
நேற்றைய சமையலின்
எச்சங்களை இழுத்துச் செல்லும்
எறும்புகளை குளிக்கச் செய்கிறாள்
கொதிநீரால்.
*மெய்யன் நடராஜ்
அதிகாலை வாசலில்
எறும்புகள் பசிதீர்க்க
மாக்கோலம் போட்டு
அழகுபாத்த மங்கை
சமையல் கட்டில் நுழைந்ததும்
நேற்றைய சமையலின்
எச்சங்களை இழுத்துச் செல்லும்
எறும்புகளை குளிக்கச் செய்கிறாள்
கொதிநீரால்.
*மெய்யன் நடராஜ்