இமைக்க மறந்த விழிகள்
வழியெங்கும் பற்பல முற்கள்!
தடுக்கி விழவைக்கும் கற்கள்!
பனியால் நடுங்கிடும் பற்கள்!
காதல் செறிப்பின்றி விக்கல்!
அன்பாய் தழுவும் மேகங்கள்!
அதற்குள் கேட்குமுன் ராகங்கள்!
பிரித்திட துடித்திடும் ஓலங்கள்!
என்று மாறுமோ காலங்கள்!
கவிதையால் நிறைந்திடும் தாள்கள்!
பணியினால் ஏற்படும் தடங்கள்!
ஓடிவர முயற்சிக்கும் கால்கள்!
இதயத்தில் ஓடிடுமுன் படங்கள்!
செவிக்குள் குழப்பிடும் மொழிகள்!
ஏக்கத்தால் மனசுக்குள் வலிகள்!
இன்பமே அதற்கான பலிகள்!
இமைக்கவே மறந்திட்ட விழிகள்!
எல்லையில் இருப்பவன் நானே!
முல்லையாய் இருப்பவள் நீயே!
என்றுநாம் சேர்ந்திடும் நாளோ..
அன்றுமுதல் காதல் திருநாளோ!