நீயும் எந்தன் பக்கத்துல

உச்சி வெயில் வேளையில..
அடி.. நீயும் எந்தன் பக்கத்துல..
உன் பார்வை பட்ட மாத்திரத்தில்
அந்த சூரியனும் வெக்கத்துல..

ஓடி யாட வாடிபுள்ள..
நம்ம வயச கொஞ்சம் மறந்திருப்போம்
மணலு மேல வீடு கட்டி
சில மணித்துளிகள் குடியிருப்போம்

அலையின் மேல ஓரலையா..
கடற் கரையின் ஓரம் சிறகடிப்போம்
கடற் தண்ணி மொண்டு குடிச்சிக்கிட்டு
காதல் வானில் பறந்திருப்போம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Mar-16, 7:35 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 1127

மேலே