விதவை

விதவை
நீ என்னுடன் இருந்தவரை
உலகம் எனக்கு தெரியவில்லை
என் உலகம் நீ என இருந்தேன்

உன்னாலே நான் இங்கு வாழ்ந்தேன்
உன்னாலே நான் இன்று தொலைந்தேன்
எங்கே என்னை தேடுவது தனியாக

நீ வானத்து வின்மீன்னாய் மாற
என் மேகங்களில்
மழை இன்றும் ஓயவில்லை

நீ நின்ற இடங்கள்
என் நெஞ்சில் ஓவியமாய்
நீ பேசிய வார்த்தைகள்
என் காதில் காவியமாய்

என் நிழலில் உன்னை பார்த்தேன்
என் நிழலை இன்று காணவில்லை
எங்கே சென்றாய் என் நிழலை
நீ கொண்டு

என் நிழலை நான் காண
உன் பாதை வர நினைத்தேன்
உள்ளே என்னை உதைத்தது
உன் இரத்தம் என் சதை

என் காதல் சருகாய் மாற
அதில் உன் நினைவுகள்
பத்திரமாய் என் நெஞ்சில்

-- சுரேகா

எழுதியவர் : சுரேகா (15-Mar-16, 8:10 pm)
சேர்த்தது : சுரேகா ராகவி
Tanglish : vithavai
பார்வை : 184

மேலே