ஒமனபெண்ணே-3
ஒமனபெண்ணே-3
நீ இங்கு இல்லை
என்று தெரியும்...
தெரிந்திருந்தும் என்
கண்கள் சுற்றி சுற்றி
பார்க்கிறது உன்
ஸ்வாசகாற்றாவது இங்கு
கரைந்திருக்கும் என்று!!!....
எல்லாரும் ஒரு வழியில போனங்க நான் வேற வழியில போனேன்...ஆனா நான் போன வழி குறுக்கு வழி இல்ல நேர்மையான வழி தான்...
அவகிட்ட பேசணும்னா அதுக்கு நிச்சயமா ஒரு காரணம் இருக்கணும், அதுவும் அவளும் என்கிட்டே பேசற மாதிரியான காரணம் இருக்கணும், அப்படி ஒரு காரணம் உருவாக்க தான் முயற்சி செஞ்சேன்..நினச்ச மாதிரியே ஜெயிச்சிட்டோம்லன்னு மனசு புல்லா சந்தோஷமா இருக்கு....
அப்படி பெருசா ஒன்னும் செய்யல, ஆனா அது என்னனு இப்போ உங்களுக்கே புரிஞ்சிடும்....
கிளாஸ் புல்லா பின்ட்ராப் சைலென்ட்....அதிர்ச்சியா, ஆச்சிரியமானு தெரியல ஆனா எல்லாருக்கும் பொறாமை இருந்துருக்கும்...அதுக்கு ரீசன்
"மோகன் தான் இனி இந்த கிளாஸ் ரெப்ரசெண்டேடிவ், இனி எந்த ப்ரோப்லம்னாலும், இல்ல நம்ப கிளாஸ் பத்தின எந்த விஷயமானாலும் அத மோகன் கிட்டே சொல்லலாம்....இனி இந்த கிளாஸ் பொறுப்பு மோகன்னோடது, மோகன நான் செலக்ட் பண்ண காரணம் எல்லா விஷயத்துலயும் சுறு சுறுப்பாவும், ஆர்வமாவும் கலந்துக்கிட்டு வெற்றிகரமா செஞ்சி முடிக்கிறான், படிப்புலயும் கவனமா இருக்கான்...அது மட்டும் இல்ல இது வரைக்கும் வச்ச எல்லா டெஸ்ட்லயும் நல்ல மார்க் ஸ்கோர் பண்ணிருக்கான்..சோ ஐ டிரஸ்ட் ஹிம், ஹி இஸ் ரைட் பெர்சன்.... " இத மேடம் சொல்லிட்டு போனதும் யார் முகத்துலையும் ஈ ஆடல, கடைசி பெஞ்சுல உக்காந்திகிட்டு எப்படி இவன் ரெப்ரசெண்டேடிவ் ஆனான்...
இத விட மிக பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா??
நிந்தியா அதான் நம்ப ஹீரோயின் என்கிட்ட வந்து கங்ராஸ் சொல்லிட்டு போனதா பாத்துட்டு எல்லார் ஸ்டொமக்லயும் புகைய ஆரம்பிச்சிருச்சு....
இப்படியே ஏதாவது ஒரு சாக்கு சொல்லிட்டு நான் நிந்தியாகிட்ட பேச ஆரம்பிட்ச்சிட்டேன், ஆனா அவ பேசறத நான் புரிஞ்சிகிட்டு, நான் பேசறத அவளுக்கு புரிய வைக்கறதுக்குள்ள நான் செத்து சுண்ணாம்பு ஆகிடறேன்...
இப்படி தான் ஒரு தடவ அவகிட்ட ஹிந்தில பேசி அவள இம்ப்ரெஸ் பண்ணனும்னு நினச்சிக்கிட்டு நைட் புல்லா பிரிப்பர் பண்ணிட்டு மார்னிங் போனதும் அவகிட்ட ஹிந்திலயே பேசி அசத்தனும்ன்ற ஆசையோட போனேன்....ஆனா நான் தான் ரெப்ரசெண்டேடிவ் ஆச்சே, சோ பிரின்சிபால் மீட்டிங்குக்கு கிளாஸ் சார்பா போக வேண்டியதா போச்சு...நிந்தியாகிட்ட பேசனும்ற துடிப்பு என்ன ஒரு வழி ஆக்கிடுச்சு.... கடைசியா ஒருவழியா மீட்டிங் முடிஞ்சி ஆசையா அவகிட்ட பேச கிளாஸ்கு ஓடினேன்....அவளும் இருந்தா, அவகிட்ட பேச வாய்ப்பும் கிடைச்சது...
அவகிட்ட போய் நின்னேன், அவளோ என்னனு அவ கண்ணாலேயே கேட்டா, ஏற்கனவே மீட்டிங்க்ல அவங்க போட்ட அறுவைல நான் பேச நினச்சது பாதி மறந்து போச்சு, இப்போ நிந்தியா கண்ண பாத்ததும் மீதியும் மறந்து போச்சு...
என்ன பேசறதுனே தெரியாம கடைசியில "நத்திங்" னு சொல்லிட்டு திரும்பி பாக்காம ஜொள்ளு வழிய வந்தது தான் மிச்சம்...
காலேஜ்னாலே எங்களுக்கு பிடிச்ச விஷயம் பங்க்ஷன்ஸ் தான்.. அதே மாதிரி பங்க்ஷனும் வந்தது, நாளைக்கு தான் பங்க்ஷன்....நிந்தியா ஏதோ சர்ப்ரைஸ் தர போறதா அவ பிரண்ட்ஸ் கூட பேசிட்டு இருந்தத கேட்டேன்... அவ குடுக்க போற சர்ப்ரைஸ் அவ பிரண்ட்ஸ்க்கு மட்டும் இல்ல எங்க ஒட்டு மொத்த பசங்களுக்கும் தாணு அவளுக்கே தெரியாம போச்சு...
அவளோட சர்ப்ரைஸ்காக அடுத்த நாள் வரைக்கும் வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்...
நான் மட்டும் இல்ல நிந்தியா தர போற சர்ப்ரைஸ் பாக்க நீங்களும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க....