பூக்கும் சிரிக்கும்

காற்றில் ஒரு மலர்
உதிரும்
சேற்றில் ஒரு மலர்
பூக்கும்
பூத்தாலும் உதிர்ந்தாலும்
பறித்தாலும் எடுத்தாலும் தொடுத்தாலும்
பூக்கள் வாடும் வரை
சில கணங்கள்
சிரித்தே வாழ்ந்திருக்கும் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Mar-16, 8:35 am)
Tanglish : pookkum sirikkum
பார்வை : 136

சிறந்த கவிதைகள்

மேலே