பறந்து வந்த பட்டுப் பூச்சிக்கு

பட்டசெடி ஒன்று பூத்திட பறந்துவந்த
பட்டுப்பூச் சிக்கு தன்னிதழ் தேனூட்ட
எட்டநின்று நீர்விட்ட பெண்ணும்
கிட்டவந்து தொட்டாள் பட்டுச் சிறகினையே !

-----கவின் சாரலன்

நேரிசை ஆசிரியப்பா
ஈற்றயலடி முச்சீர் பெற்று அமைந்திருக்கிறது .

எழுதியவர் : கவின் சாரலன் (17-Mar-16, 10:17 am)
பார்வை : 153

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே