என்தழும்பு இறைவன் பெரியவனென சுட்டுகிறது
ஒவ்வொரு தழும்புக்கும் கதைவொன் றிருக்கும்
என்னுடைய(து) என்னசொல்லும்,
என்ன கிடைக்கும் இதிலிருந்து
நான்தேறி நன்றாகும் போது?
எப்படி இதிலிருந்து நான்வெளி வந்தேன்
எப்படி இதைக்கடந்தேன்?
எங்கிருந்து நான்வந்தேன்
என்று என்தழும்பு சொல்ல விரும்புகிறேன்!
இந்தக் கடுமையான கால கட்டத்தை
நானோடிய நீண்ட ஓட்டத்தை, வலியை
நான் எவ்வாறு எதிர்கொண்டேன் என்று
என்தழும்பு முணுமுணுக்க விரும்புகிறேன்;
ஆனால், பெரும்பாலும் என்தழும்பு
கொஞ்சம் பெருமையாகவே பேச விரும்புகிறேன்
என்னை வாழ்விக்கும் தோற்றுவாரை
அதுஉரக்க சப்தமிட்டுச் சொல்லவேண்டும்!
தழும்புகளுடைய போராட்டங்களைப் போராட
அன்புள்ள இறைவன் இருக்கின்றான் என்பதற்கும்,
அவனின் சிறகுகளிலேயே உயரப் பறந்தேன் என்பதற்கும்
என் தழும்பே அடையாளமாக ஆகட்டும்!
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றும்,
என்னால் மட்டுமேமு டியாதென்றும்
என்னிறைவன் துணையால் முடியுமென்றும்
என்தழும்பு பறைசாற் றட்டும்!
அவர்கள் ஒருமுறை பார்க்கட்டும்
அவர்கள் எட்டிப் பார்த்து நோக்கட்டும்
இறைவன் பெரியவனென என்தழும்பு தெரிவிக்கிறது;
அது அவனையே சுட்டுகிறது, என்னையல்ல!
Ref: Every Scar Has A Story by Poet Kristina M. DeCarlo