தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 9 = 41

“கார் கால மேகம்
நீர் வார்க்கும் நேரம்
உன் முந்தானை எனக்காய்
குடை பிடிக்க வேண்டும் !

“கார் கால மேகம்
நீர் வார்க்கும் நேரம்
என் முந்தானை உனக்கு
குடை பிடித்துப் போகும் !

நான் பாடும் பாடல் நீ தானே..!
நலம் சொல்ல இங்கே வந்தேனே..!”

என்னில் ஆடும் ஜீவன் நீ தானே
உன்னில் கோடி அன்பை விதைப்பேனே...!”


தேவைப் படும் போது
தேன் தரும் மாது
இன்ப லோகம் செல்ல
தடை ஏது கூறு ?

ஜன்னல் வழி வந்த
மின்னல் கொடிப் போல
பின்னி பிணைந்து இங்கு
புது இன்பம் காண்போம் !

தாமரை நெஞ்சம்
வண்டைக் கண்டால் அஞ்சும்

ஒரு முறை ருசிக் கண்டால்
மீண்டும் தீண்டச்சொல்லி கெஞ்சும்



வாலிப இரத்தம்
துள்ளுகின்ற வேகம்
வெள்ளி மணிகள் மெல்ல
அகழியில் பாயும்

பாயும் நேரம்
பரவச மேகம்
வேர்வை நீரை
உடலெங்கும் தூவூம்

சுற்றும் பூமி சற்று நின்றால்
சங்கதிகள் யாவும் தலை கீழாகும்

பற்று இருந்தால் சுற்றம் கூடும்
பற்று குறைந்தால் எட்ட ஓடும்

எழுதியவர் : சாய்மாறன் (19-Mar-16, 8:13 am)
பார்வை : 140

மேலே