ரோஜாவின் ராஜா

( "இதோ எந்தன் தெய்வம்" பாடல் மெட்டு.)

இன்றோ எங்கள் நேரு பிறந்தநாளே ....
அந்த பண்டிதரின் புகழினை நான் பாடுவேனே...

நேசம் பொங்கும் மார்பினிலே என்னைச் சுமந்தவன் ....
அவன் பாசம் சிந்தும் மழலைகளின் மனதில் வாழ்பவன்...

( இன்றோ....)

அவன் ஆசியாவின்
ஜோதியெனஜொலித்தான்...
அண்ணல் காந்தியாரின் சொற்படிதான் நடந்தான்...

பஞ்சசீல கொள்கைதனை
பாருக்கு அளித்தான்...
நவ பாரதத்தின் மனிதர் குல மாணிக்கமானான்...

( நேசம்...)

நாட்டு விடுதலைக்காய்
சிறையினிலே இருந்து...
வீட்டில் மகள் படிக்க அனுப்பிவைத்த மடல்கள்...

இந்திய வரலாற்றின்
வரலாறாய் மிளிர்ந்து...
அகிலம் அனைத்தினிற்கும் வழிகாட்டுது எழுந்து...

( இன்றோ....)

தன் பேச்சினிலும் மூச்சினிலும் இந்நாட்டை...
நல்ல தொழில் மயமாய் மாற்றி வைத்த மேதை...

அவன் உலகெங்கும்
ஓடோடிச் சென்று...
நிலவும் அமைதிக்காக
உழைத்த ஒளிக்குன்று...

( நேசம்...)

இன்றோ எங்கள் நேரு பிறந்தநாளே ....
அந்த பண்டிதரின் புகழினை நான் பாடுவேனே...

எழுதியவர் : இராக. உதயசூரியன் (19-Mar-16, 12:08 am)
சேர்த்தது : இராக உதய சூரியன்
Tanglish : rojavin raja
பார்வை : 4091

மேலே