காதலிப்போர் காதல்

காதல் என்பது ஒரு புனிதமானது
அட்சய பாத்திரம்போல்
அள்ள அள்ள குறையாத
அன்பு ஊற்று
ஆண் பெண் இரு உள்ளங்களில்
ஏற்படும் அன்புப்பரிமாற்றம்.
அது பொழுது போக்காட்டும் ஓர் உல்லாசப் பயணமல்ல,
அப்பா அம்மாவை கேட்டு வருவதல்ல காதல்
திருமணம் என்று வரும்போது
அப்பாவை கேட்க வேண்டும் அம்மாவை கேட்க வேண்டும்
என்பதெல்லாம் காதலை கொச்சைப்படுத்தும்
களியாட்டம் போன்றது
காதல் என்பது பற்றி புரியாமல் காதலிப்போர்
முதலில் காதல் சரித்திரங்களை புரட்டிப்பாருங்கள்

எழுதியவர் : kavithasan (20-Mar-16, 2:09 am)
பார்வை : 66

மேலே