காதல் காதல் காதல்

என் கோதல்கள்
விரவிக் கிடக்கும் கூந்தலை
இறுகி கட்ட வேண்டா

என் அழுத்தங்கள்
பதிந்து கிடக்கும்
இதழ்களில் எதுவும் பூச வேண்டா

என் நழுவல் விடாத
விழிக்கு இறுகச் சுற்றி
மை இட வேண்டா

என் தழுவல் நீங்காத
கண்ணமது மென்மையாக்க
போலிகள் வேண்டா

என் விரல் விளையாடும்
காதுமடல் கழுத்தடி அருகே
முடிகள் ஒதுக்க வேண்டா

என் நகங்களின் உரசல் பரவிக்
கிடக்கும் உன் நகத்திற்க்கு
வண்ணம் வேண்டா

முத்தங்கள் காய்ந்து கிடக்கும்
நெற்றிக்கு அளவு கொண்டு
எதையும் ஒட்ட வேண்டா

என் பதியங்கள் முளைத்து கிடக்கும்
உன் கால் கரண்டைகளுக்கு
அணி அழகு ஒலி செய்ய வேண்டா

நான் கடந்து முடிந்ததும் பிடித்த
என் பிடிகளைத் துடிக்கும் உன் கைமணிகட்டுக்கு எக்கட்டும் வேண்டா

வானமாய் நீளும் இரவில்
ஒளிரும் நம் ஆடைகளுக்கு
எப்போதும் நாம் வேண்டா ...

நமக்குத்தான் ஆடைகள்
வேண்டும் சும்மா !

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (20-Mar-16, 10:49 am)
பார்வை : 84

மேலே