தெனாலியின் யோசனை

ஓர் இரவில் நன்றாக உண்டுவிட்டுக் கை கழுவச்சென்றார். தெனாலிராமன். அப்போது, தன் மனைவியை ஓர் குடம் தண்ணீர் எடுத்துவர்ச்சொன்னார். ஒரு குடம் தண்ணீர் முழுதிலும் வாய்க் கொப்பிளித்தார். மீண்டும் ஓர் குடம் தண்ணீரைத் தன் மனைவியை எடுத்துவர்ச் சொன்னார். இதேபோல் நான்கைந்து குடங்கள் ஊற்றியாயிற்று. ஆனால் தெனாலிராமன் கொப்பிளித்து முடித்த பாடில்லை.

குடம் சுமந்து சோர்ந்து போன மனைவி, அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் தெனாலியைப் பற்றிப் புகார் செய்யச் சென்றார்.

அயலார்: ராமா! என் உன் மனைவியைத் துன்பப்படுத்துகிறாய்? அவளை ஏன் நான்கைந்து குடங்கள் நீர் சுமந்து வரச்சொல்லி, வாய்க் கொப்பிளித்துக் கொண்டிருக்கிறாய்?

தெனாலி: ஏன் இக்கேள்வியைத் தாம் என்னிடம் கேட்கிறீர்கள்? நான் கொப்பிளித்தத் தண்ணீரை இங்குக் கீழே ஒளிந்துகொண்டிருக்கும் திருடனின் முகத்தில் தான் துப்பிக்கொண்டிருக்கிறேன். அவனே என்னை ஏதும் கேட்கவில்லை. தாம் ஏன் என்னைக் கேட்கிறீர்?

உடனடியாக, அனைவரும் சேர்ந்து அத்திருடனைப் பிடித்துக் கொண்டனர்.

ஒருவர்: ஏன் தெனாலி, நீ திருடனைப் பிடிப்பதற்கும், உன் மனைவியைத் தண்ணீர் சுமந்து வரச் சொன்னதற்கும் என்ன சம்பந்தம்?

தெனாலி: வித்தைகள் பல தெரிந்த திருடனை என் ஒருவனால் பிடிக்கவியலாது. நான் கூச்சலிட்டால், அத்திருடன் தப்பி விடுவான். மனைவி தங்களை அழைத்ததால் மறைமுகமாக நான் உங்களைக் கூப்பிட்டது போல் ஆயிற்று. திருடனும் மாட்டிக்கொண்டான்.

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (20-Mar-16, 8:16 pm)
சேர்த்தது : ம அரவிந்த் சகாயன்
பார்வை : 339

மேலே