உதவி உதவும்

காட்சி 1 பாத்திரங்கள்: மாறன், கிழவி.
மாறன் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது, ஓர் கிழவி காய்கறி விற்றுக்கொண்டிருந்தாள். திடீரென அக்கிழவி கீழே விழுந்துவிட்டாள். காய்கறிகள் அனைத்தும் மண்ணில் விழுந்துவிட்டன. மாறன் விரைந்து சென்று அவரைக் காப்பாற்றினான். காய்கறிகளை எடுத்துக்கொடுத்தான்.

மாறன்: பாட்டி! மண்ணில் விழுந்த காய்கறிகளை எவ்வாறு விற்பீர்கள்?
கிழவி: என் வீட்டிற்குக் கொண்டு சென்று நான் கழுவிக்கொள்கிறேன். காப்பாற்றியதற்கு நன்றியப்பா.
மாறன்: 'நோ மென்ஷன் பாஸ் இட் ஆன்'.

காட்சி 2 பாத்திரங்கள்: கிழவி, தாய்.
ஆ... இந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு என்னால் சமாளிக்க முடியவில்லையே....

கிழவி: என்னவம்மா? என்னவாயிற்று?
தாய்: என் உடல் நலம் மிகவும் குன்றியுள்ளது. மருத்துவரைக் காணச் செல்ல வேண்டும். அதனால் என்னால் பால் கொடுக்க முடியாது. குழந்தையை வைத்துக் கொண்டு என்னால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாது.
கிழவி: நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை நீ தாராளமாக நம்பலாம்.

சிறு நேரத்திற்குப் பிறகு.....

தாய்: நன்றி அம்மா. குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொண்டதற்கு. நம்பிக்கையாக இருக்கிறீர்கள்.
கிழவி: 'நோ மென்ஷன் பாஸ் இட் ஆன்'.

காட்சி 3 பாத்திரங்கள்: தாய், காவலாளி.

தாய் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டே இருக்கையில்...
காவலாளி: (தனக்குள்ளே... ஆ! மயக்கம் வருகிறதே!)

தாய்: ஐயா காவலாளி! தமக்கு என்ன உடல்நலம் சரியில்லையா?
காவலாளி: ஆம் அம்மா. மிகவும் தலைசுற்றுகிறது.
தாய்: சூடாகப் பால் குடிக்கிறீர்களா?
காவலாளி: முடிந்தால் கொடுங்கள் அம்மா.

பாலைக் குடித்த பிறகு....

காவலாளி: மிகவும் நன்றியம்மா. உயிர்போகும் நேரத்தில் என்னைக் காத்தீர்கள்.
தாய்: 'நோ மென்ஷன் பாஸ் இட் ஆன்'.

காட்சி 4 பாத்திரங்கள்: காவலாளி, மாறன்

மாறன் அழுதுகொண்டிருந்ததைக் கண்டார் காவலாளி.

காவலாளி: ஏன் தம்பி அழுகிறாய்? உனக்கென்ன வாயிற்று?
மாறன்: எனது பந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
காவலாளி: அவ்வளவு தானே, நான் எடுத்துத்தருகிறேன்.
மாறன்: நன்றி மாமா.
காவலாளி: 'நோ மென்ஷன் பாஸ் இட் ஆன்'.

அதைக் கேட்ட உடன், மாறனுக்கு மெய் சிலிர்த்தது. காலையில் தான் அக்கிழவிக்கு உதவியதால், தனக்கு மாலையில் காவலாளி மூலம் உதவி கிட்டியது. எனவே, பிறர்க்கு உதவி செய்தால், உதவிச்சங்கிளியின் மூலம், தனக்கே உதவி கிட்டும்.

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (21-Mar-16, 7:49 pm)
சேர்த்தது : ம அரவிந்த் சகாயன்
Tanglish : uthavi uthavum
பார்வை : 550

மேலே