ஆயுள் தண்டனை

19.03.16 - 7.43 am
உனை மன(ண)க்காவலில் ஆட்கொண்டேன்...
குற்றம் **
என்னுள்ளே நுழைந்து
உயிர் முழுக்க கரைந்தது
நான் எங்கே என
எனை தேட வைத்தது (எனை தொலைய வைத்தது)
தண்டனை **
ஆயுளுக்கும் உனை
என் மனதில் சிறை எடுத்தேன்...
விடுதலை என்பது
எந்த ஜென்மத்திலும்
உனக்கு கிடையாது...
நான் விடுதலையானாலும்
உனக்கு விடுதலை
என்பதே கிடையாது..
எனை எப்பொழுதும் நீ
ஏந்திக் கொள்ள வேண்டும்...
( பூமிப்
படுகையில் படுத்திருக்கையிலும்
உயிர் ஈர்ப்பு விசை பொய்யாக்கும் வேளையும்
என எல்லா வேளையும்
எனை நீ ஏந்த வேண்டும்...)
நீ மட்டுமே எனை ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும்..
எனை கொல்ல வேண்டும்..
பிராயசித்தம் *
குற்றவாளியின் மார்போடும் மடியோடும் சாய வேண்டும்
பின் குற்றவாளியின் விரல்களை மீட்ட வேண்டும்..
என் உச்சி நீ முகர வேண்டும்..
குற்றவாளியின் நினைவுகளை மனதில் தாழிட்டு...
காவவ்காரி நான் நிச்சயம்
குற்றவாளியின் பாதத்தில் சரணடைவேன்...
~ பிரபாவதி வீரமுத்து