மரிப்பதற்குள் மறுக்காமல் சொல்லிடு உயிரே மரித்த பின் மார்போடு அணைத்திடு நடுவனே

நின்ற வேளையும் மாலை இட்டவன் நீ ஒருவனேயடா எனக்கு...
பாடை வேளையிலும்
நீ போடும் மாலையை மட்டுமே என் கழுத்து ஏந்த வேண்டும்...
அருள்வாயடா...

இரண்டாவதாய்
கூறியது முடியாத
காரியம் தான்..
ஏனெனில்
நம் குழந்தைகளும் (செல்வங்களும் )
எனை பெற்றவர்களும்
உடன் பிறந்தவர்களும்
என் தோழிகளும்
உற்றார் உறவினர்களும்
எனக்கு இறுதி மரியாதை செய்ய
பதறுவார்கள்...
ஆகையால்
என் வேண்டுகோளை
தளர்த்திக் கொள்கிறேன்...

ஆனால்
இறுதி மரியாதையில்
முதல் மரியாதையை
நீ தான் செய்ய வேண்டுமடா
என் ஆருயிர் கணவா...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (21-Mar-16, 12:26 pm)
பார்வை : 116

மேலே