2020

மரம் இல்லை
ஆதலால் மழை இல்லை
மழை இல்லை ஆதலால் நீரில்லை
நீரில்லை ஆதலால் உயிர் இல்லை

சுடுகாட்டை நோக்கி நாடு( நான் சபிக்கவில்லை.
உண்மையை தான் கூறுகிறேன்...

வளர்ச்சி என்பது இயற்கையுடன் இணைந்து செல்லவேண்டும்...
செயற்கை எல்லாம் கோலோச்சி இயற்கையை நசுக்குவதில்லை...)


நான் ஆதாரத்தோடு கூறுகிறேன்
காடுகள் நாட்டின்
அடையாளமாக போற்றி பாதுகாத்தார்கள்
சோழ மன்னர்கள்
என்பதை
பொன்னியின் செல்வனை படித்தவர்கள் அறிந்திருப்பீர்

கதையை நகர்த்தியதே வீராணம் ஏரியில் தான்
அன்றைய வீராண ஏரி இன்றும் அப்படியே இருக்கிறதா?

உண்மையாக மனித வளர்ச்சி நாட்டில் நடைபெற்றதென்றால்
அதன் நீளமும் அகலமும் அதிகமாகியல்லவா இருக்க வேண்டும்
ஆனால் இன்றோ
வடிவேலு காமெடி போலே தான் எங்கே ஏரி என்று தேட வேண்டியுள்ளது...

இது தான் இன்றைய நாட்டின் வளர்ச்சி...


மிகவும் தொலைநோக்கு சிந்தனையுடன் ஏரி குளங்களை வெட்டினார்கள்
நம் மூதாதையர்கள்
அவர்கள் தான் உண்மையான அறிவாளிகள்...

நாளைய பற்றிய சிந்தனையால் காடுகள்
மரங்கள் செடிகள்
சுத்தமான நீர்
நிலம்
ஓட்டையில்லா ஓசோன்...
வெப்பமயமாகாத பூமி என எல்லா வளர்ச்சிகளோடும் வாழ்ந்தார்கள்...
அவற்றை நமக்கும் தந்தருளினார்கள்...

நாம் நம் சந்ததியினர்களுக்கு
என்ன தந்துவிட்டு போகிறோம் தெரியுமா?

விஷ காய்கறிகள்
மரங்கள் இல்லா உலகு
சாக்கடை நீர்கள்
ரியல் எஸ்டேட் நிலங்கள்
வெளிநாட்டு துரித உணவுகள் (காய்களோ பழங்களோ இல்லை)

நாம் தான் உலகமயமாதல் நகரமயமாதல்
எனும் பெயரில் நீர்நிலைகளை சுருக்கி
எங்கு பார்த்தாலும் கட்டிட மரங்களை நட்டுவைத்திருக்கிறோம்

எங்கே நீர் தேங்கும்
எங்கே விவசாயம் செய்வது...

இது தான் நாட்டின் வளர்ச்சியா?
எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் கழிவுநீர் கால்வாய்கள் பெருக்கெடுத்து ஓடுவது



&&&&&



இயந்திரமாய் ஓடிக் கொண்டிருக்கும்
மனிதனையும்
இரசிக்கத் தூண்டும்
எங்கள் காடு...

குழந்தைகள் காப்பகம்
என்ற சிறையில்
மழலைகளை
அடைக்கும்
மனித பதர்களே

பரந்து விரிந்த உலகில்
ஒரு அறைக்குள்
ஏன் குழந்தைகளை
ஒடுக்குகிறீர்கள்...

நாளை
உங்களை முதியோர் இல்லத்தில் தள்ள
நீங்களே
ஒத்திகை நடத்துகீறிர்களோ...



குயில்களின் கீதம் காதை தீண்டவில்லை...
செவிப்பறைகளை (காதுகளை ) கிழிய வைக்கும் இயந்திர
இரைச்சல்களை தான் காணுகிறோம்...



&&&&&





பூவி ஈர்ப்பு விசையை விளைவித்தது காடு...
காய்களை கனிய வைத்தது காடு...
மூலிகைகளை தந்தது காடு...
ஊர்களை உருவாக்கியது காடு..
ஊற்று பயணத்தை தொடங்கியது காட்டில்...
மனிதன் வாழ்க்கையை தொடங்கியது காட்டில்..
பறவைகளை பறக்க விட்டது காடு.. (கூண்டில் அடைக்கவில்லை)
விலங்குகளை உலவ விட்டது காடு (துன்புருத்தவில்லை..)

டிஸ்கவரி நேஷனல் ஜ்யாகிரப்ஃபி சொல்லி தெரிந்து கொள்ளுவதல்ல காடு...

இலையோடு அசைந்து
காற்றோடு தவழ்ந்து
மான் போல் துள்ளி திரிந்து
கங்காரு போல் வளர்ச்சிகளை தாங்கி
நிற்பதே காடு

தீப்பொறி பிறந்தது காட்டில் சிக்கிமுக்கி என..
மொழிகள் பிறந்தது காட்டில்..
விவசாயம் உதித்தது காட்டில்..
நிலக்கரி பிறந்தது காட்டில்..
சுத்த இந்தியாவின் முன்னோடி காடு..
கீதங்கள் பிறந்தது காட்டில்...
டிவிட்டர் (தகவல் தொடர்பு) பிறந்தது காட்டில்
ஒழுக்கம்(நாம் உடைகளுக்குள்ளேயும் அசிங்கங்களை தேடுகிறோம்...
காட்டில் உடல்களிலேயே அசிங்கங்கள் பார்ப்பதில்லை..)
வாழ்வது காட்டில்...

பசுமை புரட்சி
வெள்ளை புரட்சி
தேவையில்லை காட்டில்...

விலங்குகளை பார்த்தால் தெரியும் காட்டில்...

நம்பினால் நம்புங்கள்

சுத்தமான காற்று
சுகாதாரமான நீர்
( குறிப்பு :பாட்டிலில் போட்டு விற்கா நீர்)
நஞ்சில்லா காய்கனிகள்..
ஆக்ஸிஜனை வெளியிடும் மரங்கள்...
தரமான ஆடைகள்...
வெளிநாட்டு மோகமில்லா நம் நாட்டு பண்டங்கள்...
லஞ்சங்களை உருவாக்கா பண்டமாற்று முறை..
காதை வருடும் பறவைகளின் கானங்கள்..
உணர்வுகளை மட்டும் பேசும் மொழிகள்..
பிளாஸ்டிக் குடம் இல்லா
மண்குடம் பித்தளை குடம் கொண்டு வாழ்ந்த கற்கால மக்கள் (குறிப்பு : உங்கள் பார்வையில் தான்.. உடலுக்கு தீங்கில்லாதவைகள் .இவர்களின் பார்வையில் இன்னும் வளராதவர்கள் )
வரகு , சாமை, குதிரைவாலி கிலோ 100 விற்காமல் ...
அரிதான பொருளாய் அருங்காட்சியகத்தில் வைக்கப்படாமல்
மனித காலடிகள் போல்
எங்கும் விளைந்தன...

அன்னியனுக்கு தெரிந்திருக்கிறது
இந்திய காடுகளின்
அற்புதங்கள்
ஆதலால் தான்
தேடி கண்டுபிடித்து வந்தான் கப்பலேறி..

இன்று நாம் வெளிநாட்டு வாசனை திரவியங்களை பூசிக்கொள்கிறோம்
அவையின் ஆதாரம் நம் காடுகள் அறிவாயோ...

சொல்ல மறந்த கதை போல்...
சொந்த கதைகளை
மறக்கிறோம்...

சொல்லுகிறேன் கேளுங்கள்...

மஞ்சள் அவையின் காப்புரிமை (Pattern Rights)
கூட நம்மிடத்தில் இல்லை...(ஏங்க மஞ்சள் நம்ம நாட்டு பயிரா? அப்படினு கேக்கறாங்க என்னத்த சொல்ல)
வேப்பமரம் அத கூட விட்டுக்குடுத்துட்டோம் கச்சத்தீவு போல ( உடனே அரசியல் பேசறனு சொல்லிடாதீங்க அடையாளத்த மறந்துட போறீங்கனு நியாகப்படுத்தறன் அம்புட்டு தானுங்கோ...)
இதனால என்ன வந்துடுச்சி அப்டினு
கேக்கறிங்களா?

இன்னைக்கு நீங்க நவநாகரிகமான நாடுனு பேசறீங்களே
அந்த நவநாகரிகம் இந்த காடுகளோட இழப்புல தான் வேர்விட்டு வந்த ரோஜா செடி...
அழகா தெரியலாம்...
ஆனா அதுல ஆயிரத்தெட்டு முள்ளு இருக்கு...

ஒரு பானை சோருக்கு ஒரு சோறு பதம்

நம்ம காடுகள் கொடுத்த கத்தாழைய எடுத்து வித்து கோடி கோடியா சம்பாதிக்கறாங்கோ...

ரோஜா செடியில எங்கும் பெருகி இருக்க முள்ளு
வேலி காத்தான் மரம்...
நம்ம தண்ணீய வெளிநாட்டு கூல்டிரிங்க்ஸ்காரன் ஸ்டிரா போட்டு உறியறது இல்லாம இந்த மரமும் சேந்து உறியுது எதிரி நாட்டுகாரனோட நல்ல எண்ணத்துல...


எல்லைக் கோடு வகுக்கா சுதந்திர மக்கள்...
நோய் என்பதே என்னவென்று அறியா மக்கள்...
ஜாதி மதம் அறியா மனிதர்கள்...

கட்டிடக் கலையில் சிறந்து விளங்கிய மாமேதைகள்...


&&&&&


மலைகளை குடைந்து கட்டிய யாவும் இன்றும் நன்றாய் உள்ளது...
நம் நாட்டு மேம்பாலங்கள் கட்டிடங்களை போல் இடியாமல்..



&&&&&



காட்டில் மனிதர்களின் வளர்ச்சி :

பச்சையாய்
தின்றார்கள்...
நெருப்பை கண்டுபிடித்து சுட்டு திண்றார்கள்..
கடல் தண்ணீரில் வேகவைத்து உண்ணும் பொழுது உப்பை கண்டுபிடித்தார்கள்...




&&&&&



தீதும் நன்றும் பிறர் தர வாராய்....

என்பது போல...

விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே
கற்களால் ஆயுதங்களை உருவாக்கினார்கள்...
நம்மை போல் மற்ற நாடு நாசமாக வேண்டும் என்று குண்டு வைத்து புல் பூண்டு வளர கூட வழியில்லாமல் செய்யவில்லை...



&&&&&


மொழியை கண்டுபிடித்தவர்கள்:

பக்கத்தில் இருப்பவர்களிடம் முதலில் சைகை & சப்த மொழியில் பேசினார்கள்...
பின் ஓவியக்குறியீடுகளால் பேசினார்கள்..
கடைசியில் எளிதில் கண்டுபிடிக்க முடியா எண்ண முடியா மொழி என்ற ஊடகத்தை கண்டுபிடித்தார்கள்..




&&&&&




மரமும் நீரும் இல்லை என்றால் (முழுக்க முழுக்க என் கற்பனையே)

குறிஞ்சி மலையில் மனிதர்கள் உதித்தார்கள்
மலையை விட்டு கீழிறங்கினால் என்ன
இருக்கும் என்ற ஆச்சர்யத்தில் வந்தவர்களுக்கு அதிசயம் நிறைந்த காடு
திக்குமுக்காட செய்தது

மரம்..
செடி..
கொடி..
நீர்வீழ்ச்சி...
புல்வெளி...
முயல்..
மான்...

உண்ண நிறைய கனிகள் கிழங்குகள்...
சரியென்று
இவற்றைப் போலே நாமும் உருவாக்குவோம்
என்ற முயற்சியில்
காட்டின்
சிறு பகுதியை
மருதமாக்கினான் (விளை நிலங்களாக ...
குறிப்பு : விலை நிலங்களாக அல்ல...)


பின் உழைத்து உழவு செய்து வாழ்ந்தான்..
ஓர் நாள் நண்பர்களுடன் விளையாடும்
பொழுது தூரத்தில் நீர் இருப்பதையும் ...
அதன் அருகில் காட்டில் இருக்கும் மரங்களை போல் ஆனால் வேறுபட்டு இருக்கும் மரங்களை பார்த்தான் உடனே ஓடி போய் என்னவென்று
அரிய ஆவல் கொண்டான்...
சுற்றியும் தண்ணீர்...
ஆசையில் தண்ணீரில் குதித்து விளையாடிக் கொண்டிருக்கையில் நீருக்கு அப்பால் என்ன இருக்கும் என காண எண்ணி தென்னை மரங்களையும் பனைமரங்களையும் வெட்டி சாய்த்து இணைத்து கட்டி பயணம் செய்யலானார்கள் ..
அதற்கு பெயர் கூட அப்பொழுது அவர்களுக்கு தெரியாது..
(எல்லாம் தெரிந்தவன் தெரிந்தவன் என்று கூறிக்கொள்கிறோம்...
முதலில் பயன்படுத்தியவனுக்கே அந்த பொருளின் பெயர் தெரியாது...
(அவன் பயன்படுத்திய பின்னர் அவன் அறிவிற்கும் விருப்பத்திற்கும்
தகுந்தாற் போல் பெயர் இடுகிறான்)

நீர்களை தாண்டி கரை தட்டும் பொழுது நம் இடம் போலவே இங்கு ஒன்று உள்ளது என்று எண்ணி பார்க்க ஓடினார்கள்..
கடைசிவரை மணல் பரப்பிலே ஓடினார்களே தவிர ஒரு மரத்தையோ நீரையோ பார்க்கவில்லை...
இது நம் இடம் போல் இல்லை என்று எண்ணி திரும்பலானர்கள்...
ஆனால் அங்கே கட்டுமரம் இல்லை..
நீரில் அலைந்து அலைந்து நடுக்கடலுக்கே சென்றுவிட்டது...

இப்பொழுது பெரும் வேதனை அவர்களை சூழ்ந்தது....
எப்படி இங்கே உயிர் வாழ்வது (காலத்தை கழிப்பது என்று அல்ல)

அதே நிலை தான் இன்றைய நாடு என்ற பாலை நிலத்திற்கும் ( காடும் வயலும் அழிக்கப்பட்ட பகுதி)

அவர்களுக்கு தேவைையானது எல்லாம் உயிர் வாழ நீரும் மரமும் தான் அவற்றை இந்த உலகத்தில் பாதுகாத்து வைத்து நாம் வாழுவோம்...


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (21-Mar-16, 10:54 am)
பார்வை : 763

சிறந்த கட்டுரைகள்

மேலே