பிசா சு
இது
பணக்காரர்களை
பிடித்துக்கொள்கிறது
எல்லார்க்கும்.....
பிடித்துவிடுகிறது
பணக்கார வேஷம் போட.....
....பிசா ஒன்னு பார்சல்......
புளிப்போ. இனிப்போ.
கசப்போ .துவர்ப்போ ...
முகம் சுழிக்காமல்
சிரித்துக்கொண்டுதான்
தின்றாகவேண்டும்.....
கை கால் களிலெல்லாம்
அப்பிக்கொண்டு ....
நாகரீகமாக உண்டு முடிப்பார்கள் ..
பீசா சாப்பிட்டு விட்டு
நிறைய டிப்ப்ஸ்[இனாம் பணம் ]
கொடுக்க நேரிடும்..
ஆனால்.
பிசா செய்யும்
டிப்ச மட்டும் வாங்க முடியாது
சூடான சுவையான்
பிசா ,,,,
இங்கு கிடைக்கும்
என்ற பெயர் பலகையுடன் வரும்
தள்ளு வண்டி கடையை
எதிர்பார்த்து ....
காத்திருக்கும்
பிசா [வி]சுவாசி.....