சொந்தப்பந்தங்கள்

கவிதைக்கு வார்த்தையாய்
அதை எழுதும் காகிதமாய்,
கருத்தான ஓவியமாய்
அதை தீட்டும் எழுதுகோலாய்
ஓவியத்தின் வண்ணங்களாய்
இயற்கையின் பிரதிபலிப்பாய்
அதனுள் எண்ணத் தூவல்களாய்
வாழ்க்கையின் உ.யிரோட்டமாய்
உணர்வுகளின் உறைவிடமாய்
அதனுடன் இயைந்த கருத்தாய்
எல்லாமுமாய் எதனுடனும்
இணையும் உண்மையாய்
வாழ்வின் உயிர்மூச்சாய்
வாழ்வியல் ஆதாரமாய்
சோகங்களின் பங்காளியாய்
சந்தோஷ சாரல்களாய்
என்னுடனே வாழ்ந்திடும்
சொந்தக்காரர்களாய் என்
கவிதைக்கும் சொந்தக்காரர்களாய்
தாவரங்கள்
நான் வளர்க்கும் தாவரங்கள்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (21-Mar-16, 7:53 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே