புவி ஈர்ப்பில் வீழ்வது இயல்பு
மலையேற்றம்,
மலை உச்சியை அடைந்தோம்
என இறுமாந்த நேரம்,
மலை முகட்டில் ஓர் அசரீரி;
'எங்கள் காலடியில் நீங்கள்'
எங்கள் இலக்கை அடைய
நாங்கள் இன்னும் செல்ல வேண்டும்
என்றுணர்ந்தோம்!
மலை முகட்டை அடைவது எளிதல்ல,
தடைகள் பல - விட்டுவிட முடியுமா!
மலை முகட்டை மனதில் நிலைப் படுத்து,
வீழ்ந்து விடுவோம் என்று அஞ்சேல்;
புவி ஈர்ப்பில் வீழ்வது இயல்பு,
தடைகள் தகர்க்க முயற்சி செய்வோம்,
மேலே தொடர்வோம்; பயணம் சுகப்படும்!
வெற்றி நிச்சயம்!