உன்னை பார்த்த அந்த முதல்வினாடி 555

அழகே...
உன்னை நான் நம் கல்லூரியின்
முதல் நாளில் பார்த்தேன்...
நீ யாரென்று தெரியாமலே
என்னை நான் இழந்தேன்...
என்னை அறியாமல் உன்னை
நான் முழுவதும் ரசித்தேன்...
உன்னை நான் ரசித்த
அந்த வினாடி...
குங்குமம் இல்லாத உன் வகிடில்
நான் குங்குமமிட ஆசைபட்டேன்...
சுடிதாரில் பார்த்ததும் உனக்கு
சேலைவாங்கி கொடுக்க ஆசைப்பட்டேன்...
மெட்டி இல்லாத உன் பாதங்களுக்கு
நான் மெட்டியிட ஆசைப்பட்டேன்...
இது எல்லாம் என் ஆசை...
யாரோ ஒருவனாக அல்ல
உன் வாழ்க்கை துணைவனாக...
உன்னவனாக ஏற்றுகொள்வாயா
என்னை நீ...
என்னுயிரே.....