முதலிரவு

இன்று இரவு 10 மணி
சங்கீதா:
டேய் புருஷா இன்னைக்கு நமக்கு FIRST NIGHT
பிரேம்:
உளராதடி கல்யாணமாகி 1 மாசம் ஆகுது
சங்கீதா:
Ok but இன்னைக்குதான் அப்படி தோனுதுடா
பிரேம்:
என்ன மேடம் ஒரே Romantic mood போல
சங்கீதா:
ம்ம்ம் . . . ..
பிரேம்:
என்ன வெட்கமா?
சங்கீதா:
ச்சீ போடா
பிரேம்:
ஐயோ உனக்கு கூட வெட்க பட தெரியுதா
சங்கீதா:
என்ன கொழுப்பா கொன்னுடுவேன்
பிரேம்:
COOL COOL . . MY SWEET DEAR.
சங்கீதா:
ஓகே புருஷா சீக்கிரம் வாடா
பிரேம்:
சாப்பிட்டியா
சங்கீதா:
இல்ல
பிரேம்:
ஏண்டா?
சங்கீதா:
சும்மாதான் . .
பிரேம்:
பீசா ஆர்டர் பண்ணட்டுமா?
சங்கீதா:
வேணாம்
பிரேம்:
சரி வேற என்ன வேனும்
சங்கீதா:
நீதான்
பிரேம்:
கேட்கல
சங்கீதா:
போ போய் வேல பாரு
பிரேம்:
எங்க
சங்கீதா:
அந்த ஆந்தை ஆபீஸ்
பிரேம்:
கிண்டலா?
சங்கீதா:
பின்ன பகல்ல WORK பண்ணுனா மனுஷன் NIGHT ல WORK பண்ணுனா ஆந்தை தானே
பிரேம்:
என்ன ஒரு கண்டு பிடிப்பு
சங்கீதா:
சரி எப்ப வருவ?
பிரேம்:
3 O CLOCK
சங்கீதா:
சீக்கிரம்டா
பிரேம்:
ஓகே 2.59 பரவாயில்லையா?
சங்கீதா:
அறுக்காதடா சீக்கிரம் வா இங்க போர் அடிக்குது
பிரேம்:
ஒகே ஒகே நீ தூங்கு நான் வந்து எழுப்புரேன் அதுக்கு முன்னாடீ நச்சுன்னு ஒரு முத்தம் குடு
சங்கீதா:
டச் ஸ்கீர்ன் அழுக்காயிடும் வை
பிரேம்:
ஒகே பாய்

சில நாட்களுக்கு முன்பு

சங்கீதா:
டேய் இனிமே உன்னோட சேர்ந்து வாழமுடியாது, ஒழுங்கா டைவர்ஸ் அப்லை பண்ணு, இல்ல நான் பண்றேன்
பிரேம்:
ஏய் கல்யாணம் ஆகி பத்து நாள் தாண்டி ஆகுது அதுக்குள்ள என்ன பிரச்சணை
சங்கீதா:
என்ன லவ் பண்ணகுள்ளவே தெரியும் இல்ல எனக்கு சமைக்க தெரியாது, வீட்டு வேல செய்ய தெரியாது எல்லாம் தெரிஞ்சுதானே லவ் பண்ணி கல்யாணம் பண்ண
பிரேம்:
ஆமாம் அதுக்கு என்ன?
சங்கீதா:
உங்க அம்மாவும் அக்காவும் எனக்கு வேலை செய்ய தெரியல, சமைக தெரியலைன்னு குத்தம் சொல்லிக்கிட்டே இருக்காங்க அதுமட்டுமில்லாம எனக்கு எவ்வளவு FRIENDS இருக்காங்கன்னு உனக்கே தெரியும் போன் பண்ணாலும் சாட் பண்ணாலும் எப்ப பாரு போனும் கையுமா இருக்கேன்னு திட்றாங்க
பிரேம்:
அவங்க வயசானவங்கடி அப்படிதான் பேசுவாங்க போக போக சரியாகிடும்
சங்கீதா:
ஐயோ சாமி இப்ப டைவர்ஸ் பண்ணு சரியானதுக்கு அப்புறம் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாம். நான் எங்க அம்மா வீட்ல இருக்கேன் ஒழுங்கா டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புற வழிய பாரு
பிரேம்:
இதெல்லாம் ஒரு காரணம்னு டைவர்ஸ் அப்லை பண்ணா வக்கீல் கூட காரி துப்புவாண்டி
சங்கீதா:
இப்ப பண்ணா அவன் மட்டும் தான் காரி துப்புவான் இங்க இருந்தா என் ப்ரண்ட்ஸ் குடும்பம், ஏன் தினசரி நானே என் மூஞ்சில காரி துப்பிக்க வேண்டியதுதான்
பிரேம்:
இன்னும் ஒரு வாரத்துல லீவு முடிஞ்சு நீயும் வேலைக்கு போக போற அப்புறம் என்ன ?
சங்கீதா:
இப்பவே இந்த பாடு வேலைக்கு போனா இவங்க இங்க அந்த லூசு M.D அங்க லைப் சூப்பரா இருக்கும். உன்ன நம்பி வந்தேன் பாரு ஒரு நிமிஷம் அந்த கண்ணாடி எடு
பிரேம்:
இந்தா
சங்கீதா:
(கண்ணாடியில் அவளை பார்த்து) த்தூ என்ன நானே காரி துப்பிக்கணும்
பிரேம்:
சரி வா தூங்க போலாம்
சங்கீதா:
இனி உன் கூட படுத்து தூங்குறதுக்கு தூக்குமாட்டிக்கிட்டு தொங்கலாம்.
நான் டாக்சி புக் பண்ணிட்டேன் எங்க அம்மா வீட்டுக்கு போறேன் ஒழுங்கா டைவர்ஸ் அப்லை பண்ணு குட் பாய்
5 நாட்களுக்கு முன்பு
சங்கீதா:
இப்ப எதுக்குடா இங்க வந்த, உங்க அம்மாவுக்கும் அக்காவுக்கும் சண்டை போட ஆள் இல்லைன்னு என்ன கூட்டி வர சொன்னாங்க்களா? இல்ல சார் வேற கல்யாணம் பண்ணிக்க பர்மிஷன் வாங்க வந்தியா
பிரேம:
ஏண்டி இப்படி பேசுற
சங்கீதா அம்மா
எப்ப பாரு லூசு மாதிரி உளறதே உனக்கு வேலையா போச்சு சும்மா இருடி நீங்க காபி குடிங்க மாப்ள. கல்யாணம் ஆகி 20 நாளைக்குள்ளவே இப்படி. அவ எப்பவுமே இப்படிதான் நீங்க ஒண்ணும் மனசுல வச்சுகாதிங்க
பிரேம்
அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆண்டி புதுசாவா பார்க்குறேன் பழகிடுச்சு
சங்கீதா:
ஓ அப்ப எல்லோரும் சேர்ந்து தான் பிளான் பண்ணி உன் தலையுல கட்டிட்டாங்களா, லவ் எல்லாம் ட்ராமாவா? போதும் சாமி நீயும் லூசு கூட வாழ வேணாம், என்ன பெத்தவளே நீயும் என்ன பாத்துக்க வேணாம், நான் HOSTEL- ல தங்கி என்ன பார்த்துக்குறேன்
பிரேம்:
இப்ப என்ன உன் பிரச்சணை தனி வீடு பார்க்கணும் அவ்வளவுதானே , வெயிட் பண்ணு 2 MONTH ல பார்த்துடுறேன்.
சங்கீதா:
சார் அவ்வளவு ஒண்ணும் சலிச்சுக்க வேணாம், நானே பார்த்துட்டேன் என் FRIEND வீடு
பிரேம்:
எப்ப பார்த்த?
சங்கீதா:
கல்யாணம் ஆகுறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னடியே
பிரேம்:
இப்ப காலியா இருக்கா இல்லையான்னு தெரியலையே?
சங்கீதா:
அதெல்லாம் காலியாத்தான் இருக்கு
பிரேம்:
எப்படி சொல்ற
சங்கீதா:
அட்வான்ஸ் கொடுத்து ஒரு மாசம் ஆகுது
பிரேம்:
அப்ப வாடகை
சங்கீதா:
அத நீதான் கொடுக்கணும் மாசம் JUST 12,000
பிரேம்:
அப்ப அட்வான்ஸ்
சங்கீதா:
1,00,000 நானே குடுத்துட்டேன்
அம்மா
உனக்கு ஏதுடி அவ்வளவு பணம்
பிரேம்:
ஆமா உனக்கு ஏது அவ்வளவு பணம்.
சங்கீதா:
பிரேம் கார் வாங்க காசு கேட்டான்னு சொல்லி அப்பா கிட்ட வாங்கி அட்வான்ஸ் கொடுத்துட்டேன்.
பிரேம்:
அடிப்பாவி நான் எப்படி கேட்டேன்
சங்கீதா:
அத விடு புது வீட்டுக்கு கூட்டிகிட்டு போறியா இல்ல டைவர்ஸ் அப்லை பண்றியா . . . .

இன்று காலை:
பிரேம்:
சொன்ன மாதிரியே தனி வீடு வந்துட்டியே சாப்பாடு யார் சமைக்கிறது
சங்கீதா:(சில புத்தகங்களை கையில் எடுத்து)
இது அசைவ சமயல், இது சைவ சமையல், இது சினாக்ஸ் ஐட்டம்,
பிரேம்:
பரவாயில்லையே இப்பவாவது சமைக்கனும்னு தோனிருக்கே சரி இன்னைக்கு என்ன special
சங்கீதா:
நீயே முடிவு பண்ணு.
பிரேம்:
இன்னைக்கு ப்ரைட் ரைஸ் ஒகேவா?
சங்கீதா:
ஒகே ஒகே சீக்கிரம் செஞ்சு எடுத்திட்டு வா
பிரேம்:
என்னது நானா?
சங்கீதா:
ஆமாம் அதுக்குதானே இந்த புக் சீக்கிரம் படிச்சி செஞ்சுட்டு வா பார்க்கலாம்.

பிரேம்
ஹலோ மேடம்
சங்கீதா: ( நிமிர்ந்து பார்க்கையில்)
பிரேம்:
த்து. . . . இதெல்லாம் ஒரு பொழப்பு,
சங்கீதா:த்
என்ன பண்றது பிரேம் விதி வலியது, சீக்கிரம் செஞ்சு எடுத்துட்டு வா பார்க்கலாம்.

இன்று மாலை 4 மணிக்கு.
பிரேம்:
ஹாய் குட்டிமா நான் கிளம்புறேன். Cap waiting
சங்கீதா:
லீவ் போடுப்பா ப்ளீஸ் காலையில இருந்து கேட்டுகிட்டே இருக்கேன் இப்ப வந்து ஆபீஸ் கிளம்பற
பிரேம்:
இல்லடா செல்லம் புருஞ்சிக்கோ அர்ஜெண்ட் புராஜெக்ட் லீவ் தர மாட்டாங்க உனக்கே தெரியாதா?
சங்கீதா:
இல்லடா புது வீடு, அதான். கொஞ்சம் பயமா இருக்கு.
பிரேம்
ஒரு பேய் இன்னொரு பேய ஒன்னும் பண்ணாது so don’t feel dear.
சங்கீதா:
ச்சீ போடா உனக்கு என் மேல பாசமே இல்ல
பிரேம்:
சரி போய் தல வலின்னு சொல்லிட்டு சீக்கிரமா வந்திடுறேன் ஒகேவா?

பிரேம்:
ஸ்மைல் ப்ளீஸ் , போயிட்டு வந்து அப்புறம் அப்புறம் . . . . . . . .
சங்கீதா:
கிளம்பு அப்புறம் . . . அப்ப பாத்துக்கலாம்

தற்பொழுது நேரம் 11 மணி.

டி வியில் mummy returns முடியும் நிமிடம்
தூரத்தில் குழந்தை அழுவது மாதிரி சப்தம்.
சில நிமிடத்தில் பூனைகள் சண்டையிடும் சப்தம்
சங்கீதா:
ச்ச இப்ப போயி இந்த டிவியில என்ன படம் போடுறான் பாரு

திடீரென பவர் கட் . . . .

நிசப்தம் . . .
தூரத்தில் யாரோ நடப்பது போன்ற லேசான சப்தம்
நாய்கள் ஊளையிடும் இறைச்சல் . . . .

சங்கீதா: ( மிகவும் பயத்துடன் ) தொலைபேசியில்
அம்மா ரொம்ப பயமா இருக்குமா . . நாய் எல்லாம் அழுவுது,
அம்மா:
போய் கண் துடைச்சு விட வேண்டியதுதானே
சங்கீதா:
உன் கிட்ட போய் சொன்ன பாரு. . .பயமா இருக்குமா
அம்மா:
சரி பிரேம சீக்கிரம் வர சொல்லு, போய் விபூதி வச்சுகிட்டு வா, அப்புறம் துடப்பத்த வாசல்ல போடு, பெட் ரூம நல்லா சாத்தி வைச்சுட்டு தூங்குடி . .

மீண்டும் குழந்தை அழும் சப்தம். . . .
மீண்டும் நாய்களின் ஊளை சப்தம்

பயத்தில் உறைந்தவளாய் சங்கீதா

சங்கீதா: அழுகையுடன் (mobile போனில்)
ப்ளீஸ் பிரேம் போன் அட்டன் பண்ணு . . .
சில நொடிகளில்
You dry to reach not answering your call please try after some time.

சில நிமிடங்களுக்கு பிறகு . . . .
மீண்டும் குழந்தையின் அழுகை, நாய்களின் ஊளை . ..
சற்றே நிமிர்ந்து பார்த்தால்
ஒரு உருவம் . . . . . .
இடபுறத்தில் இருந்து வலபுறமாக கடக்க

சங்கீதா: அழுகையுடன் (mobile போனில்)
ப்ளீஸ் டா அட்டன் பண்ணுடா . . . .

நிசப்த்ம் . . . . .

திடீரென ஒரு லாரியின் ஹாரன் . . ..
மீண்டும் அந்த உருவம் இப்பொழுது வல புறத்தில் இருந்து இடபுறம் நோக்கி . . .
மீண்டும் நிசப்தம் . . ..

திடீரென கரண்ட் வர டீவியில் மிகுந்த சத்தம் . . .

அலறிய படி சென்று டிவியை off செய்து விட்டு

அழுகையுடன் சென்று படுக்க . . .

சில மணி நேரத்தில்

க்க்க்ரிரிரிங்க்ங்க்ங்க்

அலறியபடி எழுந்தால்
டக் டக் டக்
யாரோ கதவை தட்டும் சப்தம்

கிட்டே நெருங்கினால்

மீண்டும் டக் டக் டக்

மிகுந்த பத்ட்டத்துடன் கதவு கிட்டே வர

க்க்க்ரிரிரிர்ங்ங்
காலிங்க் பெல்

சங்கீதா (அலறிய படி):
யாரு . . . .
வெளியில் இருந்து ஒரு குரல்
உன் புருஷன் . . .

கதவை திறந்து ஓடி சென்று பிரேமை கட்டி அனைத்து அழுது துடிக்க
பிரேம்: என்ன ஆச்சு டியர் ஏன் அழுவுற . . . .
. . . . . . . . . . .
மறு நாள்.

சங்கீதா:
ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது நாம உங்க வீட்டுக்கே போயிடலாம் . . . .
என்னால தனியா இருக்க முடியாது கஷ்ட்ட பட்டாலும் பரவாயில்லை
உங்க வீட்டுக்கே போயிடலாம் . . . .
(முற்றும்)
இப்படி முடிக்கனும்னு எனக்கும் ஆசதான் (BUT ) அங்க நடந்தது . .

சங்கீதா:
ஒரு நிமிஷம் கூட என்னால தனியா இருக்க முடியாது, நீ இன்னைக்கு வேற வீடு பாரு . . .
பக்கத்துல எதுருல எல்லாம் ஆள் இருக்குற மாதிரி நல்ல வீடா பாரு. .
எல்லாத்த விட முக்கியமான விஷயம்
இந்த மாசமே நீ day shift போற வழிய பாரு

வீடு மார்ற வர நீ என் கூடவே இருக்க ஓகே

சில நாட்களுக்கு பிறகு :
வேறு ஒரு புது வீட்டிற்கு மாறிய பிறகு . . .

சங்கீதா:
டேய் புருஷா இன்னைக்கு நமக்கு FIRST NIGHT
பிரேம்:
உளராதடி கல்யாணமாகி 1 மாசம் ஆகுது
சங்கீதா:
Ok but இன்னைக்குதான் அப்படி தோனுதுடா
பிரேம்:
என்ன மேடம் ஒரே Romantic mood போல
சங்கீதா:
ம்ம்ம் . . . ..
மீண்டும் ஒரு முதலிரவு


எண்ணமும் எழுத்தும்

ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (21-Mar-16, 10:44 pm)
Tanglish : muthaliravu
பார்வை : 6411

மேலே