நடமாடும் நதிகள் - 46

1.
மொழிக்கு அர்த்தம் தெரியாது
நான்கு மொழிகள் கற்கின்றனர்
- மழலைமாறா பூக்கள்

2.
நிற்காமல் ஓடு
ஓடிக் கொண்டே இருக்கிறது
- நேரம்

3.
இணைகிறது மனம்
துண்டிக்கப்படுகிறது உடல்
- ஜாதிப் பிரச்சனை

4.
ஆசிரியர் பின்பற்ற தவறினார்
மாணவன் கேட்க மறுத்தான்
- குடி போதையில் இருவரும்

5.
பயத்தில் கண் சிமிட்டியதோ
அழகியை பார்த்து கண்ணடித்ததோ
- மின்னல்

6.
அடிமைப்படுத்தியவர் வெளியேறிவிட்டனர்
அடிமைத்தனம் வெளியேறவில்லை
- சார் ( Sir - slave i remain )

7.
விதியால் அடைப்பட்டோம்
விடியலே இல்லை
- நிரந்தரமானது சிவப்பு விளக்கு

8.
அள்ளி அணைத்துக்கொள்
என்னுள்ளே ஐக்கியமாகிவிடுவாய்
- ( நடமாடும்) நதிகள்

9.
விடியலைத் தேடி
இரவிலே பெற்றோம்
- சுதந்திரம்

10.
உயிர் துட்சமானது
தங்கம் உயர்வானது
- பட்டப்பகலில் செயின் பறிப்பு


மனமார்ந்த நன்றி 
```````````````````````````` 
தொடர் தொகுப்பாசிரியர் :திரு ஜின்னா அவர்கள்
முகப்பட வடிவமைப்பு : திரு கமல் காளிதாஸ் அவர்கள்
தொடர் ஒருங்கிணைப்பு : திரு முரளி T N அவர்கள்
முகப்பட பெயர் செதுக்கல் : திரு ஆண்டன் பெனி அவர்கள்
அனைவரும் நன்றி..!

எனது படைப்பை பார்ப்பவர்களுக்கும், கருத்திடுவோர்களுக்கும், எழுத ஊக்குவித்த எழுத்து தளத்திற்கும், இவ் வாய்ப்பை தந்த இறைவனுக்கும் மிக்க நன்றி...!

வாழ்க வளமுடன்.

எழுதியவர் : நித்யஸ்ரீ (22-Mar-16, 6:36 am)
பார்வை : 363

மேலே