துளிப்பாக்கள்

மறுபடியும் போய்
தரிசிக்க முடியாத சொர்க்கவாசல்
தாயின்கருவறை

முட்டையை
அடைகாக்கும் சேவல்
அப்பா

மனிதனின் தலையெழுத்தில்
பிரம்மன் செய்த எழுத்துப்பிழை
ஊனம்

மேகமளித்த
வைரமகுடம்
புல்லின்மேல் பனித்துளி

வானில் உதயமாகி மறுகணம்
பூமியில் மடிகிறது
மழைத்துளி

எழுதியவர் : ப்ரியா (22-Mar-16, 12:56 pm)
பார்வை : 244

மேலே