தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல்-13 = 45
“சங்க கால சந்தம் பாடும்
சங்கீத குயிலே ! சங்கீத குயிலே !!
உன் பிம்பம் பட்டால் வறண்ட தரையும்
பரிணாமம் பெறுமே ! பரிணாமம் பெறுமே !!”
“இந்த கால கானம் பாடும்
தேவராஜ மகனே ! தேவராஜ மகனே !!
உன் இன்ப கானம் கேட்க கேட்க
சுகம் கோடி தருமே ! சுகம் கோடி தருமே !!”
மலை மூடும் மேகத்தை
கலைக்க வந்த காற்றே
எனை மூடும் ராசாத்திக்கு
சால்வை நான் போர்த்தினேன் !
நிலவை மூட வந்த
கார் இருள் மேகமே
சால்வை போர்த்தும் ராசாவுக்கு
சரச அறையை காட்டுவேன் !
காட்டுகின்ற அறையினில் கட்சிதமாய் நுழைந்து
விட்டு விட்டு கடிக்கும் கட்டெறும்பு ஒன்று
கடிக்கின்ற சுகத்தில் இருக்கின்ற இரகசியம்
இருவருக்கு மட்டுமே தெரிகின்ற விஷயம் !
ஏகாந்த வேளை பாடும் பாமாலை
காதல் ! காதல் !! காதல் !!!
நந்தவன சோலை பூக்கின்ற வேளை
ஊடல் ! ஊடல் !! ஊடல் !!!
மஞ்சம் விரிக்கின்றேன்
மனமொத்து நடக்கின்றேன்
இதமாக கொடுக்கின்றேன்
சுதியேற மகிழ்கின்றேன்
உறவுகள் பிரிவதும் மறுபடி இணைவதும்
மனித வாழ்க்கையில் இயற்கைதான்
சிலமுறை தொடுவதும் பலமுறை இடுவதும்
பால்ய உறவில் சகஜம்தான் !