தொட்டு செல்லடி என் இதயத்தை 555

உயிரே...

நான் உன்னை
முதன்முதலில் பார்த்தபோது...

என் விழிகளுக்கு
கல்லாக தெரிந்திருந்தால்...

என் வீட்டு சுவற்றில்
உன்னை பதித்திருப்பேன்...

நான் மண்ணை தோண்டியபோது
நீ தங்கமாக கிடைத்திருந்தால்...

உன்னை உருக்கி கழுத்தில்
மாட்டிருப்பேன்...

என் வீட்டு தோட்டத்தில் பூக்களோடு
பூக்களாக நீ மலர்ந்திருந்தால்...

என் கைகளால்
பூமாலையாக தொடுத்திருப்பேன்...

கிளியாக நீ இருந்திருந்தால் என்
கைகளில் பிடித்து விளையாடி இருப்பேன்...

பவையாக நீ இருந்ததால்
என்னவோ...

முள்ளாக என் இதயத்தில்
குத்திவிட்டாய்...

புண்ணாகிப்போன என் இதயம்...

இன்னும் உன்னைப்பற்றியே
புலம்பிக்கொண்டு இருக்கிறது...

மருந்தாக நீ வேண்டாம்...

ஒருமுறை உன்கைகளால்
என் இதயத்தை தொட்டுசெல்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (22-Mar-16, 8:27 pm)
பார்வை : 352

மேலே