தெளிவு

கொண்டை இல்லாக்
கோழிகள் கொண்டை
வளர்த்து சேவலாயின

பாட இயலாக் காகங்கள்
கரையக் கரைய
குயில் களாயின

வானம் பூத்து
உதிரும் மலர்கள்
மழை என்றார்கள்

உள்ளுக்குள் ஒளிந்திருக்கும்
உற்சாக ஊற்றைத்
தட்டி எழுப்புங்கள்

உள்ளத்தில் எழுவதைக்
கேள்வியால் துளைப்பவர்
குழந்தைகளென நம்புங்கள்

அந்தக் கவிஞனுக்கு
மனம் தெளிந்து விட்டது
கடவுளைத் தேடுகிறான்
முகம் திருப்பிக் கொள்ளுங்கள்
----முரளி

எழுதியவர் : முரளி (23-Mar-16, 1:46 pm)
Tanglish : thelivu
பார்வை : 195

மேலே