யாராய் இருக்கக் கூடும் ---கயல்விழி

அவன் யாராய் இருக்கக்கூடும்----கயல்விழி

இதோ
நான் நடந்து செல்லும்
இந்த
ஒற்றையடிப் பாதை
ஏளனம் செய்கிறது
பாதணிகள்
காலில் பாதி தான்
இருக்கின்றதாம்.

வாசனை திரவியங்கள்
அறியாத தேகம்
வியர்வை நாற்றத்தை
கலந்து
நாசினில் நுழைக்கிறதாம்
தென்றலும் தீண்டாமல்
செல்கிறது..

சாலையோர மரங்கள்
சபிக்கத் தொடங்கி விட்டது
இதோ என் நிழலை
அசுத்தபடுத்தவே வருகிறாள்
இவள் என

எஞ்சியுள்ள நாய்களும் முறைக்கின்றன
இன்றும் எச்சில் உணவுகளை
இவளே
எடுத்துக்கொள்வாளென..

ம்ம்ம்

நான் யார் இப்போது
பைத்தியகாரியா.?
அல்லது
பிச்சைக்காரியா..?
இரெண்டுக்கும் இடைப்பட்டவளா.?

என்னை எனக்கே தெரியாத
போது
இவளையும் நேசிக்கிறானாம்
ஒருவன்

சொல்லுங்கள்
அவன் யாராய் இருக்கக் கூடும்...?

எழுதியவர் : கயல்விழி (23-Mar-16, 2:32 pm)
பார்வை : 528

மேலே