ஏக்கம்
மனம் திறந்த மானிட பிறவியாக
உன்னிடம் மண்டியிட்டு என் வாழ்கையில் மாற்றம் வர
நீ வேண்டும் என்று எண்ணிய நான் மதி மயங்கி
உன்னிடம் விழ வாசனை இழந்த மல்லிகை மலர் போல
நீ வீழ்ந்துகிடக்க , ஏன் என்று கேட்கிறேன்
மௌனமாய் பார்த்தாய் மனம் உடைந்து போனேன்
இருந்தும் உன்னை விட்டு தடம் பெயரவில்லை
என் தன்மானத்தை விட்டெறிந்தேன்
விடியும் வரை காத்திருந்தேன்
நீ விழித்திருந்து வருகையிலே
உன்மேல் வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன் , உன்
வாடியதன் காரணம் என்னவென்று கேட்டேன் அன்றும்
பதிலுரைகவில்லை, காரணம் நானாக இருப்பேனோ என எண்ணி எண்ணி
இன்றும் என் கண்ணீர் தடாகத்தில் மிதக்கிறேன்
(வலியோடு ) வழியின்றி .....
தமிழ் அரவி