புரியாத உலகமடா
புரியாத உலகமடா
புரிந்தும் திருந்தாத உள்ளமடா.
மாற்றம் வேண்டும் என்பார்
மானுடரே வாரும் என்பார்.
கூழுக்கும் கஞ்சிக்கும்
கூடிய கூட்டத்தை
கூவியழைத்ததிலே
தலைவரின் தொண்டையோ
தாறுமாறாய் கிழிந்திருக்கும்.
சத்தத்தின் கோரத்திலே - சிலசமயம்
செத்தவனும் எழுந்திருப்பான்.
நல்லிணக்கம் வேண்டுமென்பார்- அதற்கு
வரைவிலக்கணம் இன்னதென்பார்.
போர் வந்து புயல் வந்து
ஊரெல்லாம் அழிந்தபோதும்
எட்டியும் பார்க்காதவர் - மேடையில்
எதுகை மோனையிலே
என்னன்னெமோ வாசிப்பார்.
அது
அவருக்கும் புரிவதில்லை
அவையோர்க்கும் புரிவதில்லை
அதை எழுதியவனுக்காவது புரிந்தால்
எமக்கும் சந்தோசம்தான்.
கரகோஷம், கரகோஷம், கரகோஷம், கரகோஷம் !
அமைதி, அமைதி, அமைதி,அமைதி !
கட்சியின் வளர்ச்சியில்தான்
அமெரிக்க வளர்ச்சியே
உண்டு என்பார் - ஆனால்
கடைசி வரை கட்சிக்காய்
கடினமாய் உழைத்தவனுக்கு - இங்கே
கிட்டியது என்னமோ
ஆபிரிக்க வளர்ச்சிதான்.
உலகின்
மானுட வர்க்கத்தையே
மந்தைகளாய்
மாற்றுவது - இரண்டு விடயங்கள்தான்
ஒன்று அரசியல்
மற்றொன்று மதவெறி
இவ்விரண்டில் சிக்காத மனிதன்தான்
இந்த நூற்றாண்டின் அறிவாளி
நாட்டையே மாற்றுபவன்
அவன் அறிவாளி
நாட்டை "யே" மாற்றுபவன்
அவன் அரசியல்வாதி
இதை
உணராமல் வாழ்பவன்தான்
இங்கே கோமாளி...............
By: Unknown Expert (அறியப்படாத அனுபவசாலி)