உனக்காகவே நின்றுவிடும் என் இதயம் 555

என்னவளே...

உன்னைமட்டும் நினைத்து நினைத்து
துடிக்கும் என் இதயம்...

நீ திரும்பி பார்க்க
மறுப்பதென்னடி ஒருமுறை...

நீ சூடும் அந்த மல்லிகை
பூ போல வருவேனடி...

உன் கையால் சூடி நீயே கசக்கி
எரியும் வரை உன்னை காதலிப்பேனடி...

நீ வெறுத்தாலும் உன்னுடனே
வருவேன் நிழலாக...

நீ வெறுத்து வெட்டினாலும்
மீண்டும் மீண்டும் வளருவேனடி...

உன் விரல்களில் நகமாக...

உனக்காக துடிக்கும் என் இதயம்
ஒருநாள் உனக்காகவே நின்றுவிடுமட.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (23-Mar-16, 8:45 pm)
பார்வை : 1130

மேலே