ஓமணப்பெண்-4

ஓமன பெண்ணே-4
கிறங்கி தான்
கிடக்கிறேன்உன் சிரிப்பின் சத்தத்தில்
தெளியவே வேண்டாம்
என் மயக்கம் என்று
யாசிக்கிறேன் உன்னை
நீ சிரிப்பதை நிறுத்தி விடாதே!!!...
நிந்தியா குடுக்க போற சர்ப்ரைஸ் என்னனு யோசிச்சி பாக்கும் போது எனக்கு தூக்கமே வரல, எப்போ விடியும், எப்போ காலேட்ஜ் போவேன்னு ஒரே துடிப்பா இருந்தது, இன்னிக்குனு பார்த்து டைமே போக மாட்டேன்குது...எப்போ விடியும்னு கடுப்பா இருக்கு, நிந்தியா காலேட்ஜ் வந்த பர்ஸ்ட் நாள், அவ என்கிட்டே பேசன அந்த முதல் நிமிஷம் இதையெல்லாம் நினைக்கும் போது உள்ளுக்குள்ளே இனம் புரியாத ஒரு உணர்வு என்ன என்னமோ பண்ணுது, ஆனா அது சுகமா இருக்கு...
இப்படி யோசிச்சிகிட்டே எப்போ தூங்கினேன்னு தெரியல, பட் தூங்கிட்டேன்....வழக்கம் போல இல்லாம புதுசா அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு காலேட்ஜ் போனேன்...அங்க எல்லா பொண்ணுகளும் செம அழகா டிரஸ் பண்ணிட்டு வந்திருந்தாங்க...இதுவே பழைய மோகனா இருந்திருந்தா நிச்சயமா சைட் அடிச்சிருப்பேன், ஒவ்வொரு பொண்ணுக்கும் எவ்ளோ மார்க் போடலாம்னு கரெக்டா சொல்லி இருப்பேன்...ஆனா இப்போ என் மனசு புல்லா என் நிந்தியா தான் இருக்கா...அவள தாண்டி யாரையும் பாக்க என்ன, யோசிக்க கூட தோனமாட்டேன்குது....இப்போ அந்த ரதியே இறங்கி வந்து என்கிட்டே ப்ரொபோஸ் பண்ணினாலும் சாரி அடுத்த ஜென்மத்துல ட்ரை பண்ணுங்கனு சொல்லிடுவேன், அவ்ளோ அவ மேல பைத்தியமா இருக்கேன்....
ஆனா அவ மேல இவ்ளோ லவ் எங்க இருந்து தான் வருதோ தெரியல, ஆனா எப்படியோ, அவள மாதிரியே அவ மேல உள்ள காதலும் எனக்குள்ள வந்துடுச்சு...
ஹோ god என் கதைய பேசிகிட்டே நிந்தியாவோட சர்ப்ரைச மறந்தே போயிட்டேன்...
அவள பாக்க நாங்க எல்லாரும் சரியான டைம்ல ஆஜர் ஆகிட்டோம், ஆனா இந்த கதையோட ஹீரோயின் இன்னமும் என்ட்ரி குடுக்கல ...சோ sad பா....காத்து வேகமா வாசகிட்ட வந்தாலே நிந்தியா தான் வந்துட்டாலோனு பதறி போய் பாக்கற நிலைமைல தான் எல்லாரும் இருந்தோம்...(நான் கொஞ்சம் அதிகமாவே அவள பாக்க ஏங்கி போய் இருந்தேன்)
இப்படி எல்லாரும் எல்லாத்துக்கும் அவ தான் வந்துட்டாலோனு திரும்பி திரும்பி பாத்து பாத்து சலிச்சு போய் நொந்து நூடுல்ஸ் ஆகிட்டோம்...எல்லாரோட தலையும் சோகத்துல தரைய பாத்து கவுந்து கிடந்தது, இன்க்லுட் மீ..
ஆனா என்னமோ தெரியல நிமிந்து பாக்கனும்னு தோனுச்சு பாத்தேன், பாத்த நிமிஷத்துல என் மனசு உடம்புன்னு ஒட்டு மொத்தமா சூடாகி என் இதயம் படபடக்க, என் காதல் குதிகுதிக்க அப்படியே கிறங்கி போயிட்டேன்...கொஞ்சம் சுதாரிச்சு எல்லாரையும் பாத்தேன், எல்லார் முகத்துலையும் வழியிற ஜொள்ளுல அவ கட்டிருந்த அந்த கேரளா சாரீயே நனைஞ்சு போய்டும் அவ்ளோ ஜொள்ளு....
இப்போ புரிஞ்சிருக்குமே நாங்க ஜொள்ளு விட காரணம் என்னன்னு, ஆமா அதே தான், அவ கேரளா ஸாரீ ல பக்கத்து பூலோகத்து தேவதை மாதிரி வந்து நின்னா...தேவதை மாதிரி என்ன தேவதையே தான்...
நிஜமாவே எனக்கு இந்த சர்ப்ரைஸ் ரொம்பவே பிடிச்சிருந்தது...அவ டெல்லி பொண்ணு, அவளுக்கு ஸாரீ கட்ட சுத்தமா வராது... அது மட்டும் இல்ல எப்போதும் மாடெர்ன் , இன்னைக்கு தான் போடுவா, இப்படி தான் நாங்க நினைச்சிகிட்டு இருந்தோம்... ஆனா இன்னைக்கு அவ ஸாரீ ல வந்துருக்கா... இன்னைக்கு மத்த பொண்ணுங்க கூட சாரீல வந்துருக்காங்க தான்...ஆனா என்னமோ தெரியல எல்லாரையும் விட அவ ரொம்பவே ஸ்பெஷலா தெரியறா...
கிளாசே ரகளையா இருந்தது..நிந்தியா கூட அவ பிரன்ஸ் கிட்ட அரட்டை அடிச்சிகிட்டு சிரிச்சிகிட்டே இருந்தா....இன்னும் கொஞ்ச நேரத்துல பங்க்ஷன்காக எல்லாரும் ஆடிடோரியம் போய்டுவோம்...அதுக்குள்ள ஏதாவது பண்ணனும்னு உள்ளுக்குள்ளே ஒரே கூச்சல்...
கண்ண மூடி தொறக்கறதுக்குள்ள நான் ஸ்டேஜ் மேல நிக்கிறேன்....
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே
நீ போகும் வழியில் நிழலாவேன்
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு
உன் பார்வை நீ
நகர்த்திடும் பகலை இரவை
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே
இப்படி அவள பாத்து பாடி முடிச்சதும் கிளாசே கை தட்டுச்சு, அவளும் வெட்கத்தோட சிரிச்சிக்கிட்டே கை தட்டினா...எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் நான் பாடினது அவளுக்காக தான்னு...அவளுக்குமே தெரிஞ்சிருக்கும்...எல்லாரும் ஆடிடோரியம் போக கிளம்பினோம்...அப்போ நிந்தியா என்கிட்ட வந்து பங்க்ஷன் முடிஞ்சதும் என்ன வந்து மீட் பன்னுங்க, நான் உங்ககிட்ட பேசணும்னு கீழ போற அவசரத்துல சொல்லிட்டு போய்ட்டா....பங்க்ஷன் சூப்பரா முடிஞ்சிடுச்சது....ஆனா எனக்கு நிந்தியா என்ன சொல்ல போராளோனு மனசு புல்லா திகிலா இருந்தது, கோவபடுவாளா? இல்ல காதல் சொல்வாளா?...எதுவா இருந்தாலும் இன்னைக்கே ஒரு முடிவு தெரிய போகுது... சோ ஐ யாம் ஹாப்பி தான்....

எழுதியவர் : இந்திராணி (24-Mar-16, 3:52 pm)
பார்வை : 341

மேலே