தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 1 6 = 48

ஆராரோ..! ஆரிரரோ...!! – என்
அம்புஜமே நீ ஆராரோ...!

ஆரிரரோ..! ஆராரோ...!! – என்
அன்னமே நீ ஆரிரரோ...!

கண்மணியே நீ கலங்காதே
கண்ணீரை செலவு செய்யாதே
சான் வயிறு பசிக்குதா..
சரச குடல வருடுதா ..

பெத்தவ நான் கோழைதான்
உங்கப்பன்காரன் ஏழைதான்
பால் கொடுக்கவும் சத்தில்லாம
நானென்ன பாவம் செஞ்சேனாம் ?

ஆராரோ..! ஆரிரரோ...!! – என்
அம்புஜமே நீ ஆராரோ...!

ஆரிரரோ..! ஆராரோ...!! – என்
அன்னமே நீ ஆரிரரோ...!

எத்தனையோ கம்பெனிங்க
ஏறியிறங்கி வந்தேனம்மா
அத்தனையும் கைகழுவி
ஏளனாமா பாக்குதம்மா

எழுத்தாணிக்கொண்டு படிக்காம
எருமாடு மேய்ச்சதால
ஏழையின்னு பட்டம் வாங்கி
நெத்தியில ஒட்டிக்கொண்டோமம்மா

ஆராரோ..! ஆரிரரோ...!! – என்
அம்புஜமே நீ ஆராரோ...

ஆரிரரோ..! ஆராரோ...!! – என்
அன்னமே நீ ஆரிரரோ...!


பஞ்சம் விரித்தாடும் உலகிலே
பட்டினியால் வாடும் பல புள்ளே

நிலையான பொழப்பில்லே
நம்ம ஏக்கம் எப்போ தீருமோ ?

உங்கப்பன் நான் ஏழையம்மா
உங்காத்தா ஒரு கோழையம்மா

ஒரு வேளை சோத்துக்கே
ஒப்பாரி வைக்கிறோமம்மா

ஆராரோ..! ஆரிரரோ...!! – என்
அம்புஜமே நீ ஆராரோ...!

ஆரிரரோ..! ஆராரோ...!! – என்
அன்னமே நீ ஆரிரரோ...!

எழுதியவர் : சாய்மாறன் (25-Mar-16, 11:22 am)
பார்வை : 67

மேலே