உக்கிரம் கூடுதலாக அனல் பரக்க

கதிரவன்கண்ணும் கருத்துமாகத்
தொடர்கிறான் ஒரு நாளைப் போல

உக்கிரம் கூடுதலாக அனல் பரக்க
பாய்ந்து ஒடி விளையாடுகிறான்.


"உஸ் உஷ்" என்று பெருமுச்சு எங்கும் ஒலி க்க
மனிதன் தவிக்கிறான் தன்னாலே மயங்கி.

பானக்கம் சற்றுக் கை கொடுத்து தூக்கி விட
நீர் மோர் தகிப்பை மிதப்படுத்த

இளநீர் அருந்தி சற்று ஆசுவாசப்ப்டுத்திக் கொள்ள
அதன் விலையோ ஒரு மலைப்பை உண்டாக்க

மனிதன் குளிர் பானம் நோக்கி ஓடுகிறான்
மலிவு என்ற போதிலும் அதில் நன்மைக் குறைவே

தெரிந்தும் மண்டுகிறான் மட மட வென்று
உயிர்க் குடிப்பான் என்ற அறிந்து கொண்டே.

வெயிலும் குறையவில்லை என்றும் போல
ஏறியது என்று குறைந்தது அனைத்திலுமே
அனல் குறைய

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (25-Mar-16, 10:40 am)
பார்வை : 666

மேலே