எண்ணச்சுடரும் வண்ணக்கவியும் பாகம் - 9 பாடல் -33

“உதயகால நிலவாய் உன்னைப் பார்த்தேன் - என்
இதயம் முழுதும் உனக்காய் தியாகம் செய்தேன்
மதியை இழந்த நீயோ விதியை நோகிறாய் - இன்று
என் மரணம் மீது விழுந்து வீணாய் கதறுகிறாய்..!

சந்தேகக் கண்கொண்டு என்னை நோக்கினாய்
சந்தோஷமாய் இருப்பதற்கு நெஞ்சம் தயங்கினாய்
இருவரும் இருதலையாகத்தானே காதலித்தோம்..!
இடையில் ஏன் என்னை தருதலையாக பாவித்தாய்..?

பருவத்தில் பயிர் செய்தல்தானே உலக நடைமுறை
பருவம் தவறி மழைபெய்தால் பயிராலேது நன்மை ?
பருவ பயிரைப்போல்தான் பருவ கன்னி வாழ்க்கையும்
பருவம் கடந்துப்போனால் உருவம் கிழடு தட்டிடும்..!

காதல் கூட அதற்கு விதி விலக்கல்ல;
காலம்தான் பதில் சொல்ல வேண்டும் மெல்ல !
உயிருக்குயிராய் உன்னை காதலித்த என்னை
நீ பிரிந்து - உயிர்பறித்து - தின்ன விட்டாயே மண்ணை..!

எழுதியவர் : சாய்மாறன் (25-Mar-16, 7:50 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 53

மேலே