பூவே பூவே

பூ ஒன்று பூத்தது நேற்று
அழகாக விரிந்து

பூ ஒன்று வாடியது இன்று
சோர்ந்து சுருங்கி

பூ ஒன்று நினவூட்டியது நேற்று
எல்லாமே நிறைவு என்று

பூ ஒன்று காட்டியது இன்று
யாவுமே நிலையற்றது என்று

பூவே பூவே எனக்கு கற்பித்தாய்
வாழ்வே மாயை என்று.


பூவே பூவே எனக்கு புகட்டினாய்
என் நிலைப்பாட்டை எளிமையாக


சொல்லில்லை உன்னிடம் அறிவுறுத்த
செயலே உன்னுடைய திறன்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (25-Mar-16, 8:03 pm)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : poove poove
பார்வை : 2178

மேலே