பண்பில் சிறந்தவை

மவுனம் கொள்வது
மனதில் அமைதி

மாற்றம் வருவது
மனித வாய்ப்பு

அவசரம் கொள்வது
மடமையின் நிலை

ஆத்திரம் கொள்வது
தொலைக்கும் நிம்மதி

மனிதம் என்பது
பண்பின் இருப்பிடம்

அறிவுரை ஏற்பது
தருவது ஆறுதல்

வாழ்த்தி போற்றுவது
குணங்களில் சிறந்தது

நீதியில் நிலைப்பது
நேர்மையின் வெற்றி

தர்மம் செய்வது
பிறர்நலம் காப்பது

கடவுளைக் காண்பது
கருணையின் வடிவில்

வேண்டுவது வாழ்வில்
பணிவும் பரிவும்

எழுதியவர் : பாத்திமாமலர் (25-Mar-16, 5:10 pm)
பார்வை : 131

மேலே