வாழ்க்கை என்றும் உங்கள் வசமாகும்
எங்கே இதயம்,
அது இருவரின் 'கைகளில்' இருக்கிறது,
ஆண் பெண் இருவரின் கைகளில் இருக்கிறது,
கணவன் மனைவி இருவரின் கைகளில் இருக்கிறது;
காதலர் இருவர் காதலிக்கையில்
புற அழகே கண்ணுக்குத் தெரிகிறது;
திருமணத்திற்குப் பின் அவரவர்
குறைகள் பெரிதாய்த் தெரிகிறது;
விட்டுக் கொடுத்தல் அவசியமே,
இருவர் வாழ்வில் புரிதல் அவசியமே,
ஒருவருக்கொருவர் தன்முனைப்பு (Ego)வேண்டாமே,
அவசர முடிவாய் விவாகரத்து வேண்டாமே;
வாழ்க்கை வாழ்வதற்கே,
புரிந்து இணைந்து வாழ்வதற்கே,
அழகாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்,
வாழ்க்கை என்றும் உங்கள் வசமாகும்!
Note: (Ego) Evicting God out
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
